இந்தியா 76! செய்திகள் நாடும் நடப்பும்

தேர்தல் முடிவுகள் எதுவாக இருந்தாலும் அமெரிக்க – இந்திய உறவு நீடித்து வளரும்

டெல்லி, நவ. 06 ‘தேர்தல் முடிவுகள் எப்படி இருந்தாலும், இந்தியா, அமெரிக்கா உறவுகள் வளரும்’ என ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உறுதி அளித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு முடிவடைந்த நிலையில், ஓட்டு எண்ணிக்கை நடந்து வருகிறது. டொனால்டு டிரம்ப் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். தற்போது நிலவரப்படி அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்பது உறுதியாகி உள்ளது. அமெரிக்கா தேர்தல் குறித்து, ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் செய்தியாளர்களிடம் கூறி இருப்பதாவது:– உறவுகள் வளரும் […]

Loading

இந்தியா 76! செய்திகள்

2036 ஆம் ஆண்டில் இந்தியாவில் ஒலிம்பிக் போட்டி நடத்த விருப்பம்

டெல்லி, நவ 5 2036 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடத்த அனுமதி கோரி, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியிடம் இந்திய ஒலிம்பிக் சங்கம் முறைப்படி விண்ணப்பித்துள்ளது. உலக நாடுகள் பங்கேற்கும் ஒலிம்பிக் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை வெகு ஜோராக நடத்தப்பட்டு வருகிறது. நடப்பு 2024ம் ஆண்டுகான போட்டி, பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடத்தப்பட்டது. 2028 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்க உள்ளது. 2032 ஆம் ஆண்டு ஒலிம்பிக் […]

Loading

இந்தியா 76! செய்திகள் முழு தகவல்

உலகிலேயே மிகவும் மாசுபட்ட நகரம் லாகூர்

லாகூர், நவ. 5 பாகிஸ்தானிலும் குளிர் காலத்தில் காற்று மாசுபாடு தீவிரம் அடைகிறது. வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் தரம் குறைந்த எரிபொருளை பயன்படுத்துவதால் ஏற்படும் புகை, குப்பைகள் மற்றும் பயிர்கழிவுகளை எரிப்பதால் ஏற்படும் புகை மூட்டம், கட்டுமானப் பணிகள் காரணமாக பரவும் தூசுக்கள் என பல்வேறு காரணங்களால் காற்று மாசுபாடு அதிகரிக்கிறது. காற்றின் தரக்குறியீடு (ஏகியூஐ) 0 முதல் 50 வரை இருந்தால் காற்றின் தரம் நன்றாக இருப்பதாக கருதப்படுகிறது. 51-–100 திருப்தி, 101- – 200 […]

Loading

இந்தியா 76! செய்திகள் முழு தகவல்

ஏப்ரல் முதல் ‘கலைமகள்’ யூடியூப் சேனல்

சென்னை, நவ. 2 “கலைமகள்- யூடியூப் சேனலை அடுத்த ஆண்டு (2025) ஏப்ரல் மாதம் முதல் கொண்டு வரலாம் என்கிற எண்ணம் உள்ளது. இதேபோல் டெல்லியில் திருக்குறள் களஞ்சியம் நூலினை வெளியிடும் ஏற்பாடுகள் நடந்து வருகிறது. ஜனவரி மாதம் மூன்றாம் வாரம் கலைமகளின் 94வது ஆண்டு விழாவை சென்னையில் சிறப்பாக நடத்த முடிவு செய்துள்ளனர். விழாவில் மூன்று தமிழ் ஆளுமைகள் பாராட்டப்படுவதுடன் “கலை மகள்” பற்றிய ஆவணப்படம் ஒன்றையும் வெளியிட எண்ணி உள்ளோம்” என்று பதிப்பாளர் பி […]

Loading

இந்தியா 76! செய்திகள் நாடும் நடப்பும்

அகல் விளக்குகள் செய்து அசத்தினார் ராகுல் காந்தி

புதுடெல்லி, நவ. 2 ராகுல் காந்தி அகல் விளக்கு செய்யும் குடும்பம் ஒன்றைச் சந்தித்தார். பின்னர் அவர்களோடு சேர்ந்து தான் செய்த அகல் விளக்குகளை தனது தாய் மற்றும் சகோதரிக்கு கொடுப்பதற்காக வாங்கிச் சென்றார். காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான தனது இந்திய ஒற்றுமை பயணத்துக்கு பின் பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடல் நடத்தி வருகிறார். குறிப்பாக விவசாயிகள், செருப்பு தைப்பவர், லாரி-–பஸ் டிரைவர்கள், முடி […]

Loading

இந்தியா 76! செய்திகள்

அக்டோபர் மாத ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1.87 லட்சம் கோடியாக உயர்வு

புதுடெல்லி, நவ. 2 கடந்த அக்டோபர் மாதத்தில், சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) மூலம் ரூ.1 லட்சத்து 87 ஆயிரத்து 346 கோடி கிடைத்துள்ளது. நாடு முழுவதும் அக்டோபர் மாதம் உள்நாட்டு விற்பனை அதிகரித்ததால் ஜி.எஸ்.டி. வசூல் உயர்ந்துள்ளது. இதனால் அக்டோபர் மாதம் 9 சதவீதம் அதிகரித்து ஒட்டுமொத்த ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1 லட்சத்து 87 ஆயிரத்து 346 கோடியாக உயர்ந்துள்ளது. இதில் மத்திய ஜி.எஸ்.டி. வசூல் ரூ.33,821 கோடியாகவும், மாநில ஜி.எஸ்.டி. ரூ.41,864 கோடியாகவும், […]

Loading

இந்தியா 76! செய்திகள்

மகாராஷ்டிரா தேர்தல்: ஒரே தொகுதியில் 167 வேட்பாளர்

மும்பை, நவ. 02 மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தலில் ஒரே தொகுதியில் 167 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதால், 9 க்கும் மேற்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்களை பயன்படுத்த வேண்டியுள்ளது. மகாராஷ்டிரா சட்டமன்றத்திற்கு 20 ந்தேதி நடக்க இருக்கும் தேர்தலில் உத்தவ் தாக்கரேயின் சிவசேனாவும், காங்கிரஸும், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. காங்கிரஸ் தலைமையிலான மகா விகாஷ் அகாடி மற்றும் பாரதீய ஜனதா தலைமையிலான மகா யுதி என இரண்டு கூட்டணிகளிலும் தேர்தல் தொகுதி பங்கீடு […]

Loading

இந்தியா 76! செய்திகள்

விண்வெளித்துறையில் நிறுவனங்களுக்கு உதவ ரூ.1,000 கோடி நிதியம்: மத்திய மந்திரிசபை ஒப்புதல்

புதுடெல்லி, அக் 25 விண்வெளித்துறையில் புத்தொழில் நிறுவனங்களுக்கு உதவ ரூ.1000 கோடி மூலதன நிதியம் அமைக்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நடந்தது. அதில், முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. விண்வெளித்துறையில் புத்தொழில் (ஸ்டார்ட்அப்) நிறுவனங்களுக்கு உதவ ரூ.1,000 கோடி தொகுப்பு நிதி கொண்ட மூலதன நிதியம் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. மந்திரிசபை கூட்டம் முடிந்த பிறகு, மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் இதுகுறித்து நிருபர்களிடம் கூறியதாவது:- […]

Loading

இந்தியா 76! செய்திகள்

சுப்ரீம் கோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா நியமனம்: ஜனாதிபதி உத்தரவு

புதுடெல்லி, அக் 25 சுப்ரீம் கோர்ட்டின் தற்போதைய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், அடுத்த மாதம் (நவம்பர்) 10-ந் தேதி ஓய்வு பெறுகிறார். இதைத்தொடர்ந்து மூத்த நீதிபதி சஞ்சீவ் கன்னாவை சுப்ரீம் கோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக ஜனாதிபதி திரவுபதி முர்மு நியமித்து உள்ளார். இந்த தகவலை மத்திய சட்டத்துறை மந்திரி அர்ஜூன் ராம் மெக்வால் நேற்று வெளியிட்டார். அதன்படி நாட்டின் 51-வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா நவம்பர் 11-ந்தேதி பதவியேற்கிறார். அவர் அடுத்த ஆண்டு (2025) […]

Loading

இந்தியா 76! செய்திகள் நாடும் நடப்பும்

பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு கையெழுத்திட வேண்டும்: மு.க.ஸ்டாலினுக்கு கல்வி மந்திரி கடிதம்

புதுடெல்லி, ஆக.31-– ஏற்கனவே உறுதி அளித்தபடி பி.எம்.ஸ்ரீ திட்ட ஒப்பந்தத்தில் தமிழ்நாடு கையெழுத்திட வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் கடிதம் எழுதி உள்ளார். நாடு முழுவதும் அரசு பள்ளிகளை தரம் உயர்த்துவதற்காக ‘பி.எம்.ஸ்ரீ’ திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. 14 ஆயிரத்து 500 பள்ளிகளை தரம் உயர்த்த திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் 18 லட்சம் மாணவர்கள் பலன் அடைவார்கள். இந்த பள்ளிகள், புதிய கல்விக்கொள்கைக்கு ஏற்ப முன்மாதிரி பள்ளிகளாக தரம் […]

Loading