செய்திகள்

மத்திய – மாநில ஊழியர்களின் வைப்பு நிதி: வலைதளத்தில் பதிவேற்றம்

சென்னை, மே 24–

தமிழக அரசு பணிநிலை சார்ந்த அனைத்து இந்திய அரசு சேவை அதிகாரிகள், தமிழக அரசு ஊழியர்கள் தமிழ்நாடு ஊராட்சி ஒன்றியம், நகராட்சி தொடக்க, நடுநிலை, உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் சென்னை மற்றும் மதுரை மாநகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் ஊழியர்களின் 2023–2024ஆம் ஆண்டிற்கான பொது வருங்கால வைப்பு நிதி வருடாந்திர கணக்கு விபர அறிக்கை தமிழ்நாடு மாநில முதன்மை கணக்காயர் அலுவலக வலைதளத்தில் jttps://cag.gov.in/ae/tamil–nadu/en பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதிகாரிகள் / சந்தாதாரர்கள் கணக்கு விவர அறிக்கையை தங்கள் இணையதள பக்கத்தில் உள்நுழைந்து ‘‘Online Service–– Want to know your GPF status’’ மெனுவின் கீழ் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்த அலுவலக வலைதளத்தில் அலைபேசி எண்ணை பதிவு செய்த அனைத்து சந்தாதாரர்களுக்கும் இந்த பதிவேற்றம் குறித்த குறுஞ்செய்தி அனுப்பப்படும் என்று முதுநிலை துணை மாநில கணக்காயர் (நிதி) சி.ஜே. கார்த்திக்குமார் ஒரு அறிக்கையில் கூறியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *