செய்திகள்

தொழில் நுட்ப கோளாறு: சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை பாதிப்பு

சென்னை, ஜன. 14–

தொழில் நுட்ப கோளாறு காரணமாக சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை பாதிக்கப்பட்டது.

சென்னை விமான நிலையம் முதல் அண்ணா சாலை வழியாக விம்கோ நகர் வரை மெட்ரோ ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இதில் பொதுமக்கள் தினந்தோறும் பயணம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று தொழில்நுட்ப கோளாறு காரணமாக மெட்ரோ ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.தற்போது குறிப்பிட்ட இந்த வழித்தடத்தில் ஒற்றை பாதை மெட்ரோ ரெயில் சேவை மட்டுமே இயக்கப்படுவதால் பயணிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளானார்கள்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *