செய்திகள்

சென்னை மெரீனாவில் போராடத்திற்கு அழைப்பு விடுத்து சமூக வலைதளத்தில் பரவிய தகவல்

போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு

சென்னை, ஜூன் 22–

பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கூறி போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து சமூக வலைதளத்தில் பரவிய தகவல் காரணமாக சென்னை மெரீனா கடற்கரையில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் மெரினாவில் ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்தது என்பதும் அது உலக அளவில் கவனத்தை ஈர்த்தது என்பது தெரிந்தது. இதனை அடுத்து மெரினாவில் போராட்டம் நடத்த காவல்துறை தடை செய்துள்ள நிலையில் இன்று திடீரென மெரினாவில் கள்ளச்சாராயத்திற்கு எதிரான போராட்டம் நடத்தப் போவதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவியது.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 50க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ள நிலையில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி மெரினாவில் ஒரு சிலர் கூட இருப்பதாக சமூக வலைதளத்தில் தகவல் பரவியதாக கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து போலீசார் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தினர். மொத்தம் 150 போலீஸார் குவிந்துள்ளனர். மணற் பரப்புகளிலும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மெரினா கடற்கரைக்கு வருபவர்களை விசாரணை செய்தும், கலங்கரை விளக்கம் முதல் கண்ணகி சிலை வரை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் யாராவது போராட்டம் நடத்தினால் உடனடியாக அவர்களை கலைக்கவும் கைது செய்யவும் போலீசார் தயார் நிலையில் உள்ள

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *