செய்திகள்

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா – தென் ஆப்பிரிக்கா மகளிர் டெஸ்ட் கிரிக்கெட்

ரசிகர்கள் இலவசமாக நேரில் பார்க்கலாம்

டி20 டிக்கெட் விற்பனை 29–ந் தேதி தொடக்கம்

சென்னை, ஜூன் 26–

சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் இந்தியா – – தென் ஆப்பிரிக்கா மகளிர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை ரசிகர்கள் இலவசமாக நேரில் பார்க்க அனுமதி அளிக்கப்படுகிறது.

தென் ஆப்பிரிக்கா மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள், 1 டெஸ்ட், 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. அதில் முதலில் நடைபெற்ற 3 ஒருநாள் போட்டிகளிலும் தென் ஆப்பிரிக்கா பெண்கள் அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது.

அடுத்தாக டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் ஜூன் 28 ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்நிலையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஜூன் 28ம் தேதி முதல் 1ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்தியா –- தென்னாப்பிரிக்கா இடையேயான மகளிர் டெஸ்ட் போட்டியை பார்க்க அனுமதி இலவசம் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. விக்டோரியா ஹாஸ்டல் சாலை வழியாக வரும் சி, டி மற்றும் இ கீழ் தளத்திலும், வாலாஜா சாலை வழியாக வரும் ஐ, ஜெ, கே கீழ் தளத்திலும் பார்வையாளர்களுக்கு அனுமதி இலவசம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், ஜூலை 5, 7, 9 ஆகிய தேதிகளில் நடைபெறும் டி20 போட்டிகளுக்கான டிக்கெட்டை, 29ம் தேதி PAYTM insider இணையத்தில் வாங்கி கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. டி20 போட்டிகளுக்கான டிக்கெட் விலை 150 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *