செய்திகள்

சென்னையில் இணைய தள , வைபை சேவைளுக்கு வன்பொருள் உற்பத்தி

அமெரிக்காவின் நெட்கியர் பன்னாட்டு நிறுவனம் தீவிரம்

இணைய தள , வைபை சேவைளுக்குத் தேவையான உதிரிப்பாகங்களான வன்பொருள்களை தயாரித்து விற்பனை செய்துவரும் உலகப் புகழ்பெற்ற பன்னாட்டு அமெரிக்க நிறுவனம் நெட்கியர்.

அமெரிக்காவில் உள்ள இந்த நிறுவனத்தின் 650 உயர் தொழில் நுட்பப் பணியாளர்களில் 65 பேர் இந்தியப் பொறியியல் வல்லுநர்கள்.

இப்போது இந்த நிறுவனத்தின் 10 சதவீத இணைய தள , வைபை சேவைளுக்குத் தேவையான உதிரிப்பாகங்கள் இந்தியாவில் விற்பனையாகிறது.

இந்த நிலையில் இந்த நிறுவனம் தனது நெட்கியர் வன்பொருள்கள் தயாரிப்புத் தொழிற்சாலையின் கிளையை இந்தியாவில் தொடங்கத் திட்டமிட்டது.

பெரும் முதலீட்டில் இந்த நெட்கியர் நிறுவனத்தை இந்தியாவில் முதலீடு செய்யும்போது தாங்கள் போட்ட முதலுக்கு குறைபாடு இல்லாமல் வன்பொருகள் உற்பத்தி பொருக வேண்டும்; விற்பனை அதிகரிக்க வேண்டும்; லாபம் கூடுதலாகக் கிடைக்க வேண்டும் என்று விரும்பிய நெட்கியர் பன்னாட்டு தொழில் நிறுவனம் தொழில் அமைதியாக நடத்துவதற்கு ஏற்ற மாநிலம் எது என்று இந்தியா முழுவதும் சுற்றிச்சுற்றித் தேடிவந்தது.

இந்தியாவில் தயாரிப்போம் என்று மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் தனது நெட்கியர் தொழிற்சாலையை உருவாக்க முடிவு செய்த இந்த நிறுவனம் அதற்கு பொருத்தமான இடம் தமிழ்நாடுதான் என்று கண்டறிந்தது. அதன்படி சென்னையில்த்தான் நெட்கியர் உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க வேண்டும் என்று உறுதியாக முடிவெடுத்துள்ளது.

சென்னையில் நெட்கியர் உற்பத்தி தொழிற்சாலையின் ஊழியர் எண்ணிக்கை 1300 பேருக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வன்பொருள் பொறியாளர்களுக்கும் நிர்வாகப் பணியாளர் களுக்கும் இதர ஊழியர்களுக்கும் வேலை வாய்ப்புக் கிடைக்கும் என்று எதிர்பார்பார்க்கப்படுகிறது.

சென்னையில் இணைய தள , வைபை சேவைளுக்குத் தேவையான உதிரிப்பாகங்களை உற்பத்தி செய்து இந்தியா முழுவதிலும் உள்ள 30 நகரங்களில் தனது விற்பனை அலுவகங்களைத் திறந்து வன்பொருள்களை விற்க இந்த நெட்கியர் நிறுவனம் தீவிரமாக இறங்கிவிட்டது. இதற்காக பெங்களூருவில் 20 ஆயிரம் சதுர அடிப் பரப்பளவுள்ள மாபெரும் அடுக்குமாடிக் கட்டிடத்தில் நெட்கியர் நிறுவன இணைப்பு அலுவலகத்தை சுறுசுறுப்பாகத் தொடங்கிவிட்டது.

#wifi #internet #software #technology

Loading

One Reply to “சென்னையில் இணைய தள , வைபை சேவைளுக்கு வன்பொருள் உற்பத்தி

  1. ஆஹா நல்ல விஷயம், விரைவில் நல்ல விஷயம் நடக்கும் என எதிர்பார்ப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *