சிறுகதை

சாதிக்கப் பிறந்தவர்கள் – ஆர். வசந்தா

மறுநாள் தைப்பொங்கல். ஊரெல்லாம் கடைகளில் பொங்கல் சாமான்கள் விற்கவும் அதனை வாங்கவும் மக்கள் போட்டி போட்டிக் கொண்டு சென்றார்கள். ஒரு வீட்டில் மட்டும் எந்தவித சலனமில்லாமல் வீட்டிலிருந்தார்கள்.

அப்போது பேரன் சூர்யா மட்டும் தன் தாத்தாவிடம் ஏன் தாத்தா நாம் மட்டும் பொங்கல் அன்று பொங்கல் வைக்கக் கூடாது என்று கேட்டான். அது பெரிய கதை. எனக்குத் தெரிந்தவரை சொல்கிறேன். மீதியை அத்தைப் பாட்டியிடம் கேட்டுத் தெரிந்து கொள் என்று பதில் உரைத்தார் தாத்தா.

இந்த புளியம்பட்டி கிராமம் 200 ஆண்டுகளுக்கு முன் நிர்மாணிக்கப்பட்டது. அதை நிர்மானித்தவர்கள் ஒரு முடிவெடுத்தார்கள். ஒவ்வொரு சாதிக்கப் பிறந்தவர்களுக்கும் 5 தெருக்கள் என வரிசைப் படுத்தினார்கள். ஒவ்வொரு தெருவிலும் ஒரு கிணறு இருக்க வேண்டுமென்று முடிவெடுத்தார்கள். ஒரு சின்ன ஆரம்பப் பாடசாலையும் தொடங்கப்பட்டது. அங்கு கலைகளும் விளையாட்டும் கண்டிப்பாக கற்பிக்கப்பட வேண்டும். நடுவில் ஒரு பொதுவான மடம் வேண்டும். ஏதாவது பிரச்சனை என்றால் அங்கேயே தீர்க்கப்படும் என முடிவெடுத்தார்கள்.

மடத்தை ஒட்டி ஒரு மாரியம்மன் கோவிலும் உண்டு. ஒரு கோடாங்கியும் இருந்தார். அவரிடம் வீட்டுப் பிரச்சனை, சாமான்கள் காணாமல் போனால் முத்துக் குறி போட்டு விடை சொல்லுவார்.

அவரவர் வீட்டில் பொங்கல் வைத்தால் அதோடு போய்விடும். அதனால் அனைவரும் தை மாதம் வரும் செவ்வாய் கிழமை அன்று அனைவரும் பொங்கலிட வேண்டும் அப்போது தான் நம்மிடையே ஒற்றுமை வளரும். திருவிழாவின்போது கலை நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பெரியவர்கள் முடிவெடுத்தார்கள். அதனாலேயே நம் வீட்டில் பொங்கல் வைப்பதில்லை.

செவ்வாய் அன்று புளியம்பட்டியே களை கட்டி விடும். எங்கும் வேப்பிலைத் தோரணம் கட்டி விடுவார்கள். ‘நகரா’’ என்ற பெரிய தோல் வாத்தியம் முழங்க ஆரம்பித்துவிடும். நடு இரவில் திருவிழா ஆரம்பித்து விடுவார்கள்.

முதலில் ‘‘நகரா’’ என்ற முரசு அடித்து வருவார்கள். இரண்டாவதாக ஆண்கள் காலில் சலங்கை கட்டிக் கொண்டு கோலாட்டம் அடித்து உற்சாகமாக வருவார்கள். அடுத்ததாக சலவை தொழிலாளிகள் தங்கள் பூர்வீகமான ஒயிலாட்டம் ஆடி வருவார்கள். அவர்கள் வலது, இடது என்று தெரியாததால் ஒரு காலில் ஓலையும் மறு காலில் சிலையும் கட்டி வருவார்கள். அந்த ஒயிலாட்டம் மிகவும் விறுவிறுப்பானதாக இருக்கும் ஓலைக்கால், சிலைக்கால் என்றும் மாறி மாறி காலைத் தூக்கி ஆடி வருவார். நாக்கில் நீண்ட சிவந்த நாக்கை தொங்க விட்டப்படி ஆவேசமாக ஆடி வருவார். பார்க்க பயங்கரமாக இருக்கும். அது ஒரு குடும்பத்தின் பரம்பரை ஆட்டம். அடுத்ததாக ஒரு கரகம் கொண்டு வருவார். அதில் அம்மன் அலங்கரிக்கப்பட்டு வரும். அதுவும் ஒரு குடும்பம் பரம்பரையாக தூக்கி வருவார்கள். பின்னால் முளைப்பாரியை பெண்கள் அனைவரும் சுமந்து வருவார்கள். பெண்கள் ஆங்காங்கே நின்று கொண்டு வட்டமாக அம்மன் மேல் பாட்டு பாடி வருவார்கள்.

முளைப்பாரி என்பது மிகவும் பக்தியினால் மட்டும் வளரும். இருட்டு அறையில் ஒரு மண் ஜாடியில் கொஞ்சம் பயறு வகைகளைத் தூவி விடுவார்கள். மண் எதுவும் போட மாட்டார்கள். எருவும் வைக்கோலும் மட்டுமே போடுவார்கள். காலையில் ஒரு பெண் மட்டும் உள்ளே சென்று சிறு தண்ணீர் தெளித்து அம்மன் மேல் ஒரு பாட்டு பாடி உடனே வெளியேறி விடுவார்கள். 5 நாட்களிலேயே 1 அடி உயரம் வளர்ந்து விடும். இது ஒரு பக்திக்கு அடையாளம். சிலர் கைக்கு மட்டும் வளரும்.

எல்லாம் முடிந்ததும் மடத்திற்கு வருவார்கள். அனைவருக்கும் பானக்காரம் என்ற பானகம் தருவார்.

ஜூஸ்கள் வராத காலமாதலால் மக்கள் ரசித்து குடிப்பார்கள். அனைத்துப் பெண்களும் குலவையிட்டு பொங்கல் வைப்பார்கள். இந்த செயலால் மக்களிடம் ஒற்றுமை ஓங்கியது. நெசவாளிகள் சித்ரகுப்தன் பரம்பரையில் வந்தவர்கள். அதனால் அவர்கள் ‘‘பிறப்பு இறப்பு’’ கணக்கை வாசிப்பார்கள். மற்ற அனைவரும் அங்கு சென்று அதை கவனிப்பார்கள். ஆங்காங்கே சிறுசிறு பந்தல் போட்டிருப்பார்கள். பேரேட்டை வாசித்ததுடன் பஞ்சாமிர்தம் கொடுப்பார்கள். அனைவரும் உண்டு மகிழ்வார்கள். சித்ரகுப்தன் பிறந்தநாள் சித்ராபவுர்ணமியாகும். பொங்கலை கொண்டாடியது போல் அன்று அனைவரும் அந்த சித்ரகுப்தன் விழாவுக்கும் செல்வார்கள்.

வியப்பு மிக்க செயல்கள் சில:–

1) ஒரு தடவை பக்கத்து வீட்டிற்கு இரு பெண்கள் வந்தார்கள். புளியம்பட்டி செல்லப்போவதாகச் சொன்னார்கள். காரணம் கேட்டபோது, அங்குள்ள சந்திரா டெக்டைல்ஸ் கடையில் ஒரு வருடத் தான துணிமணிகளை வாங்கி வருவோம். விலையும் மலிவு, டிசைனும் புதிது, தரமும் உயர்வு என்றார்கள். நாயுடுஹால் போன்ற பெரிய கடைகளுக்கும் அவர்கள் தான் சப்ளை பண்ணுவதாகச் சொன்னார்கள்.

2) ஒரு பெண் சென்னையிலிருந்து புளியம்பட்டி செல்வதாகச் சொன்னாள். காரணம் கேட்டபோது அங்கு ஒரு தெருவில் தைலம் காய்ச்சித் தருவார்கள். அதன் பெயர் ‘பிரளி’ எண்ணெய். எப்படிப்பட்ட கர்ப்பப்பை கோளாறுக்கும் 3 நாள் சாப்பிட்டால் போதும் கர்ப்பபைக் கோளாறுகள் பறந்து விடும். கர்ப்பமும் தங்கிவிடும் என்றாள். இது அதிசயம் ஆனால் உண்மை. இதைத் தயாரிப்பவர்கள் ராமானுஜர் வழி வந்தவர்கள். இந்த மருத்தை குடும்ப ரகசியராக வைத்திருக்கவும்.

3) ஒரு பெரிய பண்ககாரப் பெண் மண் பாண்டம் செய்பவரிடம் மண் சட்டி வாங்கிக் கொண்டிருந்தார். காரணம் கேட்டபோது சொன்னார் என் மகள் வீட்டிற்கு அமெரிக்கா போகிறேன். எப்போதும் நாங்கள் இங்கு விற்கும் மண் பாத்திரத்தில் தான் மீன் குழம்பு வைப்போம். அதன் சுவையும் மணமும் தனி தான். அதுவும் பல தடவை சுட்ட கருப்பு மண் சட்டி விசேஷமாக இருக்கும் என்றாள்.

4) ஒயிலாட்டம் :– நம் புளியம்பட்டி சலவை தொழிலாளிகளின் பூர்வீம் என் பேத்தி லாஸ் ஏஞ்சல்சில் பொங்கல் விழாவில் ஆடப்போவதாகச் சொன்னான். மிகவும் நம் ஒயிலாட்டம் இவ்வளவு புகழ் பெற்று விட்டதா! ஆச்சர்யம் தாங்கவில்லை.

5) ஒருவர் கல்கத்தாவிலிருந்து என்னுடன் ரெயிலில் பிரயாணம் செய்தார். புளியம்பட்டி செல்லப் போவதாக கூறினார். காரணம் கேட்டேன். எங்கள் வீட்டில் ஒரு பிரச்சனை அத்துடன், ஒரு நகையும் காணவில்லை. புளியம்பட்டி கோடாங்கியிடம் குறி கேட்டால் சரியான தீர்வு சொல்லுவார். எதற்கும் அவரிடம் யோசனை கேட்போம் என்றார்கள். இவ்வளவு புகழா நம்மூர் கோடாங்கிக்கு என வியந்தேன்.

ஒற்றுமையுடன் வாழ்ந்தாலேயே கல்விக் கூடம் எங்கும் வீட்டிற்கு ஒரு என்ஜினீயர், 2 வீட்டிற்கு ஒரு டாக்டர் என்ற நிலைமையும் கல்லூரிகளும் நிரம்பி வழிகின்றன.

‘‘சாதிக்கு பிறக்கவில்லை. சாதிக்க பிறந்தோம்’’ என்பதே இக்கிராமத்தின் குறிக்கோள்.

Loading

One Reply to “சாதிக்கப் பிறந்தவர்கள் – ஆர். வசந்தா

  1. சாதிக்க பிறந்தவர்கள் கதையில் அடுத்த தலைமுறைப்பற்றிய கவலைதரும்.வரவேற்கப்படுகின்றன விஷயம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *