செய்திகள்

ஏப்ரல் மாதம் முதல் 4வது மாதமாக வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.31 குறைவு

சென்னை, ஜூலை 1–

வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.31 குறைக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் விலையை சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப நிர்ணையித்துக் கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது. அதேபோல சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்து கொள்கின்றன. ஒவ்வொரு மாதமும் சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப இந்த விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

4வது மாதமாக விலை குறைப்பு

இந்த நிலையில், எண்ணெய் நிறுவனங்கள் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை ரூ.31 குறைந்து ரூ.1,809.50 விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து 4-வது மாதமாக வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 1ம் தேதி வணிக சிலிண்டர் விலை ரூ.30.50 குறைக்கப்பட்டு, சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டர் விலை ரூ.1,930.50 என நிர்ணயம் செய்யப்பட்டது.

கடந்த மே மாதம் 1ம் தேதி வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.19 குறைக்கப்பட்டு, ரூ.1,911.50 ஆக குறைக்கப்பட்டது. கடந்த ஜுன் மாதம் 1ம் தேதி வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.72 குறைக்கப்பட்டு, ரூ.ரூ.1,840.50 நிர்ணயிக்கப்பட்டது. இந்நிலையில் தான் தொடர்ந்து நான்காவது மாதமாக ஜூலையிலும் விலை குறைக்கப்பட்டுள்ளது.

வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை. 14 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை ரூ.818.50 ஆகவே நீடிக்கிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *