செய்திகள்

உலகிலேயே சிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியலில் சென்னை ஐஐடிக்கு 227வது இடம்

மும்பை–118வது இடம்; டெல்லி–150வது இடம்

புதுடெல்லி, ஜூன் 7–

உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்கள் பட்டியலில் மும்பை ஐ.ஐ.டி., டெல்லி ஐ.ஐ.டி., சென்னை ஐ.ஐ.டி. ஆகியவை இடம் பெற்றுள்ளன. சென்னை ஐ.ஐ.டி., 227வது இடத்தை பெற்றுள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் 383வது இடத்தை பிடித்துள்ளது.

க்யூ.எஸ். எனப்படும், குவாக்கரெல்லி சைமன்ட்ஸ் என்ற தனியார் கல்வி ஆய்வு நிறுவனம், உலகின் சிறந்த கல்வி நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகிறது. 2025ம் ஆண்டுக்கான தரவரிசைப் பட்டியலை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. 104 நாடுகளை சேர்ந்த 1,500க்கும் அதிகமான கல்வி நிறுவனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

46 கல்வி நிறுவனங்கள்

தரவரிசைப்பட்டியலில் இந்தியாவை சேர்ந்த 46 உயர் கல்வி நிறுவனங்கள் இடம் பிடித்துள்ளன. சிறந்த உயா்கல்வி நிறுவனங்கள் அதிகம் கொண்ட 3வது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

* இந்திய உயர்கல்வி நிறுவனங்களில் 118வது தரவரிசையுடன் மும்பை ஐ.ஐ.டி., முன்னிலை வகித்துள்ளது. இது கடந்த 2023ல் 149வது இடத்தில் இருந்தது. அது நடப்பு ஆண்டில் 118வது இடத்துக்கு வந்துள்ளது.

* இதேபோல முந்தைய ஆண்டில் 285ம் இடம் பிடித்த சென்னை ஐ.ஐ.டி., இந்த முறை 227வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. பெங்கலூரு ஐ.ஐ.டி. 211வது இடத்தில் இருக்கிறது.

* சென்னை அண்ணா பல்கலைக்கழகம் 427வது இடத்திலிருந்து 383ம் இடத்துக்கு முன்னேறியுள்ளது. டெல்லி பல்கலைக்கழகம் 407வது இடத்தில் இருந்து 328ம் இடத்திற்கு முன்னேற்றம் கண்டுள்ளது.

உலகின் மிக தலைசிறந்த கல்வி நிறுவனம் என்னும் பெருமையை Massachusetts இன்ஸ்டிடூட் ஆப் டெக்னாலஜி (எம்ஐ)) தக்க வைத்துக் கொண்டுள்ளது.

முதல் 20 இடங்களில் ஐ.ஐ.டி. ஐதராபாத், சண்டிகர் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி நேஷனல் இன்ஸ்டிடூட் ஆப் டெக்னாலஜி, மும்பை பல்கலைக்கழகம் ஆகியவை இடம் பிடித்துள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *