செய்திகள்

ஆர்வம் ஐ.ஏ.எஸ். அகாடமியில் 19ந் தேதி ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு வழிகாட்டும் முகாம்

நிறுவனர் எம். சிபிகுமரன் தகவல்

சென்னை, மே 17–

அண்ணாநகரில் செயல்பட்டு வரும் ஆர்வம் ஐ.ஏ.எஸ். அகாடமியில் இந்திய குடிமைப் பணிகள் தேர்வுக்கான வழிகாட்டும் முகாம் 19ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது என்று நிறுவனர் எம். சிபிகுமரன் தெரிவித்துள்ளார்.

இந்த அகாடமியில் பயிற்சி பெற்று சாதனை படைத்த வெற்றி மாணவி கே.ஓவியா இந்த வழிகாட்டும் முகாமில் கலந்து கொண்டு தனது அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறார் என்றார்.

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகள் தேர்வுகள் ஆண்டுதோறும் இந்திய குடிமைப் பணிகள் தேர்வாணையத்தால் நடத்தப்பட்டு வருகின்றன. இத்தேர்வு முதல் நிலை, முதன்மை மற்றும் நேர்முகத் தேர்வு என 3 நிலைகளைக் கொண்டது.

தமிழ்நாட்டில் இருந்து தயாராக விரும்பும் பட்டப்படிப்பு முடித்துள்ள மற்றும் இறுதி ஆண்டு படித்து வரும் தேர்வர்களுக்கு வழிகாட்டும் இக்கருத்தரங்கு நடைபெறுகிறது.

இத்தேர்வு எழுதி சமீபத்தில் வெற்றி பெற்ற தமிழ் நாட்டைச் சேர்ந்த வெற்றியாளர் மற்றும் குடிமைப் பணி அதிகாரிகள் கலந்து கொண்டு தற்போதைய தேர்வுமுறை, வினாக்கள் அமையும் விதம், படிக்க வேண்டிய நூல்கள், நாளிதழ்களைப் படித்துக் குறிபெடுக்கும் அணுகுமுறை மற்றும் மேலாண்மை குறித்து தேர்வர்களுக்கு வழிகாட்டிப் பேசுகின்றார்கள்.

இத்தேர்வு தொடர்பாக தேர்வர்களுக்கு எழும் சந்தேகங்களுக்கும் பதிலளிக்கின்றார்கள். கலந்து கொள்வதற்கு கட்டணம் ஏதுமில்லை. முன்பதிவு அவசியம்.

இந்தத் தேர்வுக்கு தயாராகும் தகுதியும், விருப்பமும் உள்ள தேர்வர்கள் 2165, எல்.பிளாக், 12வது பிரதான சாலை, அண்ணா நகர் என்ற முகவரியில் நேரில் வந்து முன்பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு 9442722537, 915046631 ஆகிய எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.

Loading

One Reply to “ஆர்வம் ஐ.ஏ.எஸ். அகாடமியில் 19ந் தேதி ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு வழிகாட்டும் முகாம்

  1. ஆர்வம் ஐஏஎஸ் அகாடமி, என் கனவா இருந்த ஐஏஎஸ் உத்யோகம் கனவாகவே அழிந்து விட்டது. ஆம் என் வயதுஇப்போது69,நான்இரண்டு முறை மட்டுமே ஐஏஎஸ் தேர்வு எழுதி தோல்வியை தந்துவிடும்.1980,90களில் இம்மாதிரியான பயிற்சி மையம் இல்லாததே காரணம்.
    பாரதிராஜன்என்கிற ரங்கராஜன் அமெரிக்காவிலுள்ள பாஸ்டனிலிருந்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *