செய்திகள்

ரஷ்ய தேவாலயத் தாக்குதல்: பலி எண்ணிக்கை 21 ஆக உயர்வு

மாஸ்கோ, ஜூன் 26– ரஷ்யாவில் தேவாலயம், காவல் நிலையம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. ரஷ்யாவின் காகசஸ் மாகாணம் தாகெஸ்தான் பிராந்தியத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அப்போது டெர்பென்ட் நகரில் உள்ள தேவாலயத்துக்குள் புகுந்து நிகோலாய் கோடெல்னிகோவ் (வயது 66) என்ற பாதிரியாரை கழுத்தை அறுத்து கொன்றனர். பலி 21 ஆக உயர்வு இதனால் அங்கிருந்தவர்கள் தேவாலய அறைக்குள் ஓடிச்சென்று கதவை உள்புறமாக பூட்டிக் […]

Loading

செய்திகள்

சென்னையில் 29ந் தேதி மாலை ரஷ்யக் கலாச்சார மையத்தில் ரஷ்யக் கலைஞர்கள் இசை விழா

அனுமதி இலவசம் சென்னை, ஜூன் 26– ‘எம்பசி ஆஃப் மியூசிக்கல் மாஸ்டர்’ என்னும் பெயரில் அருமையான இசை விருந்து படைக்கவிருக்கிறார்கள் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மீயூசிக் ஹவுஸ் இளைஞர்கள் குழு. சென்னையில் உள்ள ரஷ்ய அறிவியல் – கலாச்சார மையத்தில் இம்மாதம் 29ந் தேதி மாலை 6.30 மணிக்கு இந்த இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. பியானோ கலைஞர் வி.பெட்ரோவ், ‘செல்லோ’ இசைக் கலைஞர் போல்கோன்ஸ்கயா, கிளாரினட் கலைஞர் யூசுபோவ் ஆகியோர் முன்நின்று இசை விருந்து படைக்கவிருக்கிறார்கள். ரஷ்யாவின் பிரபல […]

Loading

செய்திகள்

எங்களுக்கு உதவும் சீனாவை பாராட்டுகிறேன்: ரஷ்ய அதிபர்

பெய்ஜிங், மே 16– எங்களுக்கு உதவ எண்ணும் சீனாவின் உண்மையான விருப்பத்தை பாராட்டுகிறேன் என்று ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். 2022-ம் ஆண்டு தொடங்கிய உக்ரைன்–ரஷ்யா போரில், உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் செயல்படுகின்றன. இந்த நாடுகள் ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்திருக்கிறது. ரஷ்யாவும் அந்த நாடுகள் மீது பொருளாதார தடை விதித்து எதிர்வினையாற்றியது. ரஷ்யா – உக்ரைன் என இரு நாடுகளுக்கும் ஆதரவு தராத சீனா, ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைக்கு […]

Loading

செய்திகள்

இந்திய தேர்தலில் தலையிடுவதாக ரஷ்யா குற்றச்சாட்டு: அமெரிக்கா மறுப்பு

வாஷிங்டன், மே 10– தேர்தல் நேரத்தில் இந்தியாவை நிலைகுலையச் செய்ய முயற்சிப்பதாக ரஷ்யா முன்வைத்த குற்றச்சாட்டுக்கு அமெரிக்கா மறுப்பு தெரிவித்துள்ளது. ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜகரோவா அண்மையில் செய்தியாளர்களிடம் பேசியபோது, மக்களவை தேர்தல் நடைபெறும் நேரத்தில், மதச்சுதந்திர விதிமுறை மீறல் குற்றச்சாட்டை சுமத்தி இந்தியாவை நிலைகுலைய செய்ய அமெரிக்கா முயற்சிப்பதாக குற்றம்சாட்டியிருந்தார். நாங்கள் தலையிடவில்லை இந்த நிலையில் ரஷ்யாவின் இந்த குற்றச்சாட்டுக்கு தற்போது அமெரிக்கா மறுப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க […]

Loading