செய்திகள்

சென்னையில் 12 விமானங்கள் திடீர் ரத்து: பயணிகள் அவதி

சென்னை, ஜூலை 1– சென்னையில் 12 விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டு இருப்பதால் பயணிகள் மிகவும் அவதிக்குள்ளாகி உள்ளனர். சென்னை விமான நிலையத்தில் இருந்து தினந்தோறும் ஏராளமான விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் ஏராளமானோர் தினசரி பயணம் மேற்கொண்டு வருகின்றனர். சென்னையில் மோசமான வானிலை போன்ற காரணங்களுக்காக விமானங்கள் ரத்து செய்யப்படுவதோ அல்லது வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விடுவதோ வழக்கம். இந்நிலையில் இன்று சென்னையில் இருந்து டெல்லி, […]

Loading

செய்திகள்

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா – தென் ஆப்பிரிக்கா மகளிர் டெஸ்ட் கிரிக்கெட்

ரசிகர்கள் இலவசமாக நேரில் பார்க்கலாம் டி20 டிக்கெட் விற்பனை 29–ந் தேதி தொடக்கம் சென்னை, ஜூன் 26– சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் இந்தியா – – தென் ஆப்பிரிக்கா மகளிர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை ரசிகர்கள் இலவசமாக நேரில் பார்க்க அனுமதி அளிக்கப்படுகிறது. தென் ஆப்பிரிக்கா மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள், 1 டெஸ்ட், 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. அதில் முதலில் நடைபெற்ற 3 ஒருநாள் போட்டிகளிலும் […]

Loading

செய்திகள்

சென்னையில் 29ந் தேதி மாலை ரஷ்யக் கலாச்சார மையத்தில் ரஷ்யக் கலைஞர்கள் இசை விழா

அனுமதி இலவசம் சென்னை, ஜூன் 26– ‘எம்பசி ஆஃப் மியூசிக்கல் மாஸ்டர்’ என்னும் பெயரில் அருமையான இசை விருந்து படைக்கவிருக்கிறார்கள் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மீயூசிக் ஹவுஸ் இளைஞர்கள் குழு. சென்னையில் உள்ள ரஷ்ய அறிவியல் – கலாச்சார மையத்தில் இம்மாதம் 29ந் தேதி மாலை 6.30 மணிக்கு இந்த இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. பியானோ கலைஞர் வி.பெட்ரோவ், ‘செல்லோ’ இசைக் கலைஞர் போல்கோன்ஸ்கயா, கிளாரினட் கலைஞர் யூசுபோவ் ஆகியோர் முன்நின்று இசை விருந்து படைக்கவிருக்கிறார்கள். ரஷ்யாவின் பிரபல […]

Loading

செய்திகள்

சென்னை மெரீனாவில் போராடத்திற்கு அழைப்பு விடுத்து சமூக வலைதளத்தில் பரவிய தகவல்

போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு சென்னை, ஜூன் 22– பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கூறி போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து சமூக வலைதளத்தில் பரவிய தகவல் காரணமாக சென்னை மெரீனா கடற்கரையில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் மெரினாவில் ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்தது என்பதும் அது உலக அளவில் கவனத்தை ஈர்த்தது என்பது தெரிந்தது. இதனை அடுத்து மெரினாவில் போராட்டம் நடத்த காவல்துறை தடை செய்துள்ள நிலையில் இன்று திடீரென மெரினாவில் கள்ளச்சாராயத்திற்கு எதிரான போராட்டம் நடத்தப் […]

Loading

செய்திகள்

சென்னையில் பெண் டிரைவர் இயக்கும் 200 பிங்க் ஆட்டோ: அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு

அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஸ்மார்ட் போன்கள் சென்னை, ஜூன் 22–- சென்னை மாநகரத்தில் பெண்களின் பாதுகாப்புக்காக பெண் டிரைவர்கள் இயக்கும் ‘பிங்க் ஆட்டோ’ திட்டம் செயல்படுத்தப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் கீதா ஜீவன் அறிவித்தார். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பிறகு, துறை சார்ந்த அறிவிப்புகளை அமைச்சர் கீதா ஜீவன் வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:–- சட்டப்பேரவையில் நேற்று மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் உறுப்பினர்கள் பேசினர். அதற்கு பதிலளித்த பின்னர் […]

Loading

செய்திகள்

பக்ரீத்: தொடர் விடுமுறையை முன்னிட்டு 1,300 சிறப்பு பேருந்துகளை இயக்க ஏற்பாடு

சென்னை, ஜூன் 12– பக்ரீத் பண்டிகை மற்றும் முகூர்த்த நாளையொட்டி சென்னையில் இருந்து 1,300 சிறப்பு பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆர்.மோகன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:– வரும் 15,16 தேதிகள் வார இறுதி நாட்கள் (சனி, ஞாயிறு, முகூர்த்தம்), ஜூன் 17 பக்ரீத் பண்டிகை என்பதால் சென்னையிலிருந்தும், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் ஏராளமானோர் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைக் கருத்தில் […]

Loading

செய்திகள்

சென்னையில் 14 நாட்களில் 66 குற்றவாளிகள் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைப்பு

சென்னை, ஜூன் 10– சென்னையில் 14 நாட்களில் 66 குற்றவாளிகள் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.சென்னை பெருநகரில், குற்றவாளிகளின் தொடர்ச்சியான குற்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோ உத்தரவின்பேரில், தொடர் குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின்பேரில், நடப்பாண்டில் 01.01.2024 முதல் 09.06.2024 வரை சென்னை பெருநகரில் கொலை, கொலை முயற்சி மற்றும் பொது அமைதிக்கு […]

Loading

செய்திகள்

சென்னை கூவம் ஆற்றில் 23 இடங்களில் கழிவுநீர் கலப்பதை தடுக்கும் பணி

ரூ.50 கோடி ஒதுக்கி அரசு உத்தரவு சென்னை, ஜூன்.8- சென்னை கூவம் ஆற்றில் 23 இடங்களில் கழிவுநீர் கலப்பதை தடுக்கும் பணிக்காக ரூ.50 கோடி ஒதுக்கி அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் முதன்மைச் செயலாளர் கார்த்திகேயன் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:- தமிழக சட்டசபையில் 30.3.2023 அன்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், கூவம் ஆற்றின் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள 23 இடங்களில் கழிவுநீர் கலப்பதை […]

Loading

செய்திகள்

சென்னையிலிருந்து புறப்பட்ட விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை, ஜூன் 1– சென்னையிலிருந்து புறப்பட்ட விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை விமான நிலையத்திலிருந்து இன்று காலை இண்டிகோ நிறுவனத்தின் ’6இ – 5134’ என்ற விமானம் மும்பை செல்ல தயாராக இருந்தது. இந்த நிலையில், 172 பயணிகளுடன் மும்பை நோக்கிச் சென்று கொண்டிருந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக மும்பை விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்கு விமானி அவசர தகவல் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, மும்பை விமான நிலையத்தில் காலை […]

Loading

செய்திகள்

சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் ஜூன் 2 ந்தேதி முதல் வெப்பம் குறையும்

சென்னை, மே 30– சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் ஜூன் 2 ந்தேதி முதல் வெப்பம் குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை இன்று தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜூன் முதல் தேதியில் இருந்து தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டு முன்பாகவே பருவமழை தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. வெப்பம் குறையும் கேரளாவில் கடந்த இரண்டு வாரங்களாக கனமழை வெளுத்து வாங்கி […]

Loading