செய்திகள்

ஆந்திராவில் இருந்து வாங்கி வரப்பட்ட ‘காலாவதி’ மெத்தனால்: சிபிசிஐடி விசாரணையில் அம்பலம்

சென்னை, ஜூன் 21– ஆந்திராவில் செயல்படாத ரசாயன நிறுவனங்களில் இருந்து காலாவதியான மெத்தனாலை புதுச்சேரி வழியாக தமிழகம் கொண்டுவரப்பட்டு, சாராயத்தில் கலந்து விற்றது சிபிசிஐடி விசாரணையில் அம்பலமாகியுள்ளதாக கூறப்படுகிறது. கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தால் 100க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் 52 பேர் உயிரிழந்துள்ளனர். கள்ளச்சாராயம் விற்றதாக கண்ணுக்குட்டி என்ற கோவிந்தராஜ், அவரது மனைவி விஜயா, கோவிந்தராஜ் சகோதரர் தாமோதரன், சின்னதுரை உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர். கள்ளச்சாராய மரணம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி.,க்கு மாற்றி முதல்வர் ஸ்டாலின் […]

Loading

செய்திகள்

கள்ளச்சாராய விற்பனையை தடுக்க முன்கூட்டியே நடவடிக்கை எடுக்காதது ஏன்? : ஐகோர்ட் கேள்வி

அப்பாவி உயிர்கள் பறிபோனதற்கு யார் பொறுப்பு? தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு சென்னை, ஜூன் 21– கள்ளச்சாராய விற்பனை தொடர்பாக அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு வந்தும் அப்பாவி உயிர்கள் பறி போயுள்ளது. இதற்கு யார் பொறுப்பு” என சென்னை ஐகோர்ட் கேள்வி எழுப்பி உள்ளது. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் தொடர்பாக சி.பி.ஐ., விசாரணை கோரி அண்ணா தி.மு.க., சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் குமரேஷ் ஆகியோர் அமர்வு முன்பு […]

Loading

செய்திகள்

கள்ளக்குறிச்சி: சோகத்தில் இருந்த பெண்ணை அரவணைத்து ஆறுதல் கூறிய நடிகர் விஜய்

யாரும் சாராயம் குடிக்காதீர்கள் என்று வேண்டுகோள் கள்ளக்குறிச்சி,ஜூன் 21–- கள்ளச்சாராயம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக நடிகர் விஜய் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வருகை தந்தார். மருத்துவமனையில் கண்ணீருடன் சோகத்தில் இருந்த ஒரு பெண்ணை அரவணைத்து நடிகர் விஜய் ஆறுதல் கூறினார். கள்ளக்குறிச்சியில் விஷசாராயம் குடித்து 40 பேர் பலியான சம்பவம் தமிழகத்தையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களில் இன்னும் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு […]

Loading

செய்திகள்

கள்ளச்சாராய மரணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழ்நாடு அரசுக்கு வைகோ வலியுறுத்தல்

சென்னை, ஜூன் 20– கள்ளச் சாரய விற்பனையில் ஈடுபடும் சமூக விரோதிகளை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வைகோ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:– ‘கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச் சாராயம் குடித்து பலர் பலியாகி உள்ள துயர நிகழ்வு அதிர்ச்சி அளிக்கிறது. கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனைகள், மற்றும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் உடல் நிலை மோசமாக […]

Loading

செய்திகள்

கள்ளச்சாராயம் காய்ச்சுவோர், விற்போரை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்

செல்வப்பெருந்தகை வலியுறுத்தல் சென்னை, ஜூன் 20– கள்ளச்சாராயம் காய்ச்சுவோர், விற்போரை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று செல்வப்பெருந்தகை வலியுறுத்தி உள்ளார். இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:– கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி 10 பேர் உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியும், துயரத்தையும் தருகிறது. மேலும் பலர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்புக்கு காரணம் கள்ளச்சாராயம் அல்ல என்று மாவட்ட ஆட்சியர் மறுத்திருக்கிறார். […]

Loading