செய்திகள்

ஆந்திராவில் இருந்து வாங்கி வரப்பட்ட ‘காலாவதி’ மெத்தனால்: சிபிசிஐடி விசாரணையில் அம்பலம்

சென்னை, ஜூன் 21– ஆந்திராவில் செயல்படாத ரசாயன நிறுவனங்களில் இருந்து காலாவதியான மெத்தனாலை புதுச்சேரி வழியாக தமிழகம் கொண்டுவரப்பட்டு, சாராயத்தில் கலந்து விற்றது சிபிசிஐடி விசாரணையில் அம்பலமாகியுள்ளதாக கூறப்படுகிறது. கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தால் 100க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் 52 பேர் உயிரிழந்துள்ளனர். கள்ளச்சாராயம் விற்றதாக கண்ணுக்குட்டி என்ற கோவிந்தராஜ், அவரது மனைவி விஜயா, கோவிந்தராஜ் சகோதரர் தாமோதரன், சின்னதுரை உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர். கள்ளச்சாராய மரணம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி.,க்கு மாற்றி முதல்வர் ஸ்டாலின் […]

Loading

செய்திகள்

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 52 ஆக உயர்வு

ஓய்வு பெற்ற நீதிபதி கோகுலதாஸ் விசாரணையை துவக்கினார் கள்ளக்குறிச்சி, ஜூன் 21– கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 52 ஆக அதிகரித்துள்ளது. விசாரணை நடத்த அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி கோகுலதாஸ் கள்ளக்குறிச்சியில் தனது விசாரணையை மேற்கொண்டார். கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட கருணாபுரத்தில் கடந்த 18-ம் தேதி சட்டவிரோதமாக விற்கப்பட்ட விஷ சாராயத்தை வாங்கி சிலர் குடித்துள்ளனர். இதில் கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டு நேற்று முன் தினம் இரவு 11 மணியளவில் 17 […]

Loading

செய்திகள்

பிறந்தநாள் கொண்டாட்டங்கள் வேண்டாம்: நிர்வாகிகளுக்கு நடிகர் விஜய் உத்தரவு

கள்ளக்குறிச்சி, ஜூன் 21– தன்னுடைய பிறந்தநாள் கொண்டாட்டங்களை தவிர்த்து, கள்ளச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் மற்றும் சிகிச்சை பெறுவோரின் குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் உடனே செய்யுமாறு தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுக்கு நடிகர் விஜய் உத்தரவிட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி 52 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் அபாய கட்டத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தமிழக வெற்றிக் கழக […]

Loading

செய்திகள்

கள்ளக்குறிச்சி: சோகத்தில் இருந்த பெண்ணை அரவணைத்து ஆறுதல் கூறிய நடிகர் விஜய்

யாரும் சாராயம் குடிக்காதீர்கள் என்று வேண்டுகோள் கள்ளக்குறிச்சி,ஜூன் 21–- கள்ளச்சாராயம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக நடிகர் விஜய் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வருகை தந்தார். மருத்துவமனையில் கண்ணீருடன் சோகத்தில் இருந்த ஒரு பெண்ணை அரவணைத்து நடிகர் விஜய் ஆறுதல் கூறினார். கள்ளக்குறிச்சியில் விஷசாராயம் குடித்து 40 பேர் பலியான சம்பவம் தமிழகத்தையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களில் இன்னும் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு […]

Loading

செய்திகள்

கள்ளக்குறிச்சியில் உயிரிழந்த 27 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம்

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார் கள்ளக்குறிச்சி, ஜூன் 21– கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மெத்தனால் அருந்தி சிகிச்சை பெற்று வருபவர்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறி அவர்களுக்கு வழங்கப்படும் மருத்துவ சேவைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். இதைதொடர்ந்து கருணாபுரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் விஷ சாராயம் குடித்து உயிரிழந்த 27 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சத்திற்கான காசோலையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். […]

Loading

செய்திகள்

கள்ளக்குறிச்சி சம்பவத்தில் முழு விசாரணை நடத்த நீதிபதி தலைமையில் கமிஷன் அமைப்பு

விஷ சாராயம் குடித்து பலியானவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் : ஸ்டாலின் உத்தரவு கலெக்டர் மாற்றம்; 4 பேர் கைது மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் சென்னை, ஜூன் 20– கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். விஷ சாராய சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்த ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி பி.கோகுல்தாஸ் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைத்திடவும் முதல்வர் […]

Loading

செய்திகள்

கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய சம்பவம் அரசு அலட்சியத்தை காட்டுகிறது: நடிகர் விஜய் கண்டனம்

சென்னை, ஜூன். 20- கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் அருந்தி பலர் உயிரிழந்துள்ள சம்பவம் அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தையே காட்டுகிறது. இது போன்ற சம்பவங்கள் நிகழாத வண்ணம், இனிமேலாவது தமிழக அரசு கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு தடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன் என்று நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விஜய் தனது எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவில், “கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச் சாராயம் அருந்திய […]

Loading

செய்திகள்

கள்ளச்சாராய மரணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழ்நாடு அரசுக்கு வைகோ வலியுறுத்தல்

சென்னை, ஜூன் 20– கள்ளச் சாரய விற்பனையில் ஈடுபடும் சமூக விரோதிகளை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வைகோ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:– ‘கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச் சாராயம் குடித்து பலர் பலியாகி உள்ள துயர நிகழ்வு அதிர்ச்சி அளிக்கிறது. கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனைகள், மற்றும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் உடல் நிலை மோசமாக […]

Loading

செய்திகள்

கள்ளக்குறிச்சி சம்பவம்: தி.மு.க. அரசை கண்டித்து 22–ந் தேதி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்

பா.ஜ.க., தலைவர் அண்ணாமலை அறிவிப்பு சென்னை, ஜூன் 20– கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்காமல், மெத்தனப் போக்கில் செயல்பட்டு வரும் திமுக அரசின் கையாலாகாத்தனத்தைக் கண்டித்து 22–ந் தேதி தமிழக பா.ஜ.க. சார்பாக, மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அண்ணாமலை அறிவித்துள்ளார். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்த 36பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்ட 125-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தை தொடர்ந்து கண்டனத்தை தெரிவித்து வரும் அரசியல் கட்சி தலைவர்கள் […]

Loading

செய்திகள்

கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரம் சிபிசிஐடிக்கு மாற்றம்

சென்னை, ஜூன் 20– கள்ளக்குறிச்சி அருகே உள்ள கருணாபுரம் பகுதியில் சாராயம் குடித்து 35க்கு மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கிடையே விஷ சாராய இறப்புகள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் காலனியைச் சேர்ந்த 26 நபர்கள் வாந்தி, வயிற்றுவலி, வயிற்றெரிச்சல் போன்ற உபாதைகள் இருப்பதாகத் தெரிவித்து கள்ளக்குறிச்சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். காவல் துறை மற்றும் வருவாய்த் […]

Loading