செய்திகள்

ஹஜ் புனித பயணம் செல்பவர்களுக்கு மானியம்: செஞ்சி மஸ்தான் தகவல்

சென்னை, ஜூன் 26-

சட்டசபையில் அமைச்சர் செஞ்சி மஸ்தான், சிறு பான்மையினர் நலத்துறை யின் அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதன் விவரம் வருமாறு:-

2,500 சிறுபான்மை மகளிருக்கு மின் மோட்டாருடன் கூடிய தையல் எந்திரம் ரூ.1 கோடியே 60 லட்சம் செலவில் வாங்கப்படும்.

நலவாரியத்தில் பதிவுபெற்ற உலமாக்களுக்கு ஓய்வூதிய தொகை ரூ. 1000ல் இருந்து 1200 ஆக உயர்த்தப்படும். மூக்கு கண்ணாடி உதவித்தொகை 500ல் இருந்து 750 ரூபாயாக உயர்த்தப்படும்.

கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகையை உயர்த்தி வழங்கப்படும்.

உலமாக்கள் மற்றும் உபதேசியார்களுக்கு நல வாரியங்கள் மூலம் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகளை இணையவழியில் செயல்படுத்த தனி மென்பொருள் மற்றும் வலைத்தளம் ரூ.25 லட்சம் செலவில் உருவாக்கப்படும்.

கடலூர் மாவட்டத்தில் செயல்படும் சிறுபான்மையினர் நல கல்லூரி மாணவிகள் விடுதிக்கு ரூ.3.96 கோடியில் சொந்த கட்டிடம் கட்டப்படும்.முதல் முறையாக ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளும் தகுதி வாய்ந்த ஹஜ் புதிய பயணிகள் ஒவ்வொருக்கும் ரூ.25 ஆயிரம் மானியம் வழங்கப்படும்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் 100 மாணவர்கள் பயன்பெறும் வகையில் புதிய சிறுபான்மையினர் நல கல்லூரி மாணவர் விடுதி ரூ.56 லட்சத்தில் துவங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *