சிறுகதை

பள்ளிக்கூடம் – எம் பாலகிருஷ்ணன்

அந்தச் சின்னஞ்சிறிய கிராமத்தில் அது ஒரு பழைய நடுநிலைப் பள்ளி.

அந்தப் பள்ளிக்கூடம் மலையடி வாரத்தில் சுற்றி மரங்கள் உள்ள இடத்தில் அமைந்திருந்தது.

பள்ளி தான் பழையது என்றாலும் அஙகுச் சுற்றியிருக்கும் இயற்கைக் காட்சி காணும் கண்களுக்கு விருந்தளித்தது. அப்பேர்பட்ட பள்ளி மலையடி வாரத்தில் பசுமை நிறைந்த இயற்கை காட்சி நடுவில் தங்கக் கலசம் போல் அமைந்திருந்தது.

ஆடு மாடு மேய்க்கும் சிறுவர்கள், வயதான முதியவர்கள் பள்ளியருகே உள்ள ஆலமரத்தின் கீழ் நிழலுக்காக சற்று அமர்ந்து ஆசுவாசப்படுத்திச் செல்வார்கள்.

இளம்காற்று வீசும்போது அந்த ஆலமரம் அசைந்து குளிர்ந்த காற்றாக மாறி அமர்ந்திருப்பவர்களை அப்படியே தங்களை மெய் மறக்கச்செய்து விடும்.

அதுபோக மலையடிவாரத்தைச் சுற்றி வேப்ப மரங்களும் தங்கள் பங்கிற்கு ஜிலுஜிலுவென காற்று வீசத் தொடங்கும். பற்றாக்குறைக்கு குயில்களும் குருவிகளும் அந்த ஆலமரத்தில் அமர்ந்துகொண்டு கூவத்தொடங்கும்.

வீசும் காற்றும் பறவைகளின் சத்தத்தமும் மரத்தின் கீழ் அமர்ந்திருப்பவர்களுக்கு இன்பமான அனுபவமாக இருக்கும்.

அந்த ஆலமரத்தடியில் அமர்ந்திருந்த சிலர் மெய்மறந்து அப்படியே படுத்துக்கொள்வார்கள். எழுந்திருக்க மனமில்லாம் பொழுது சாயும்வேளை வரை அங்கேயே அமர்ந்துஇருப்பார்கள்.

அப்படிப்பட்ட இயற்கை சூழ்நிலை ஆட்கொண்ட அந்த அரசு நடுநிலைப்பள்ளி மட்டும் சில இடங்களில் விரிசலாகவும் எப்போதோ அடித்த வர்ண பூச்சுகள் வண்ணம் மங்கியதாகவும் இருந்தது.

கிராமத்தில் அதுவும் மலையடி வாரத்தில் இருப்பதால் பிள்ளைகள் ஒழுங்காக படிக்ககாமல் தென்னந்தோப்புகளையும் வாழைத்தோப்புகளையும் வேடிக்கை பார்த்துக்கொண்டும் பக்கத்தில் இருக்கும் கண்மாயில் நீச்சல்அடித்துக் கொண்டும் பொழுதை போக்கி பள்ளிக்கூடத்திற்கு போகாமல் இருப்பதால் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பட்டணத்தில் உள்ள நகர்புற பள்ளிக்கு தங்கும் விடுதியில் தங்கி வைத்து படிக்க அனுப்பி விடுவார்கள்.

அதனால் அந்த ஊர்மலையடிவாரப் பள்ளியில் குறைவான பிள்ளைகளே படித்துக் கொண்டிருந்தனர்.

அந்தப் பள்ளி ஏழாம் வகுப்பு ஆசிரியர் தனபால் கவலைப்படாத நாளே இல்லை. அவர் அந்தப் பள்ளியில் ஐந்து வருடங்களாக ஆசிரியாராக பணி புரிந்துவருபவர்.

ஆரம்பத்தில் வகுப்பு நிறைய படித்து வந்த மாணவர்கள் தற்போது பாதிக்கு கீழே தான் மாணவர்கள் பள்ளிக்கு வருகிறார்களே என்று அவ்வப்போது மனதில் எண்ணி புலம்புவார்.

இதற்கெல்லாம் காரணம் பெற்றோர்களா இல்லை மாணவர்களா அல்லது ஆசிரியர்களா என்று ஆயிரம்கேள்விகளை தனக்குத்தானே கேட்டுக்கொள்வார்.

நாம் படிப்பு சொல்லிக்கொடுக்கத் தயாராக இருக்கிறோம். ஆனால் மாணவர்கள் வர மறுக்கிறார்களே.

இயற்கை சூழ்ந்த தென்னந்தோப்பு, வாழைத் தோப்பு, மாமரங்கள், கண்மாய் நிறைந்த அழகான நமது பள்ளிக்கு வந்து படிக்காமல் பாதி மாணவர்கள் வெளியூரிலுள்ள டவுன் பள்ளிக்கூடத்தில் படிக்கப் போய் விட்டார்களே, நாமும் சரியாத்தானே பாடம் சொல்லித் தர்றோம்.

ஓ இப்பத்தான் புரியுது. தப்பு நம்ம மேல இல்ல . எல்லாம் இந்த இயற்கை அழகுள்ள இந்த ஊரு தான்.

இந்த ஊரு அழகாக இருக்குறது தப்பா இல்ல .பொறுப்பாக பாடம் சொல்லிக்கொடுக்க நாம தயாராயிருப்பது நம்ம தப்பா.

கிராமத்து பெற்றோர்கள் அதுவும் விவசாய வேலை பார்க்கும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை கண்டித்து அனுப்பாமலிருப்பது அவர்கள் மீது தப்பா? இப்படி ஒவ்வொரு காரணங்களினால் பாதிக்கப்படுவது படிக்கும் பிள்ளைகள் தானே.

பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பும்போதே அங்க இங்கவேடிக்கை பார்க்காமநேராக பள்ளிக்கூடத்திற்குபோகணும்னு பெற்றோர்கள் கண்டித்து இருந்தால் ஏன் இப்படி

வெளியூர்களுக்குபோய் ஏன் சிறை படணும்?

பெற்றவங்க மீதுகுற்றம் சொல்லமுடியாது.

அவர்கள் குடும்பத்தை காப்பாற்ற விவசாயவேலைக்கு போகவேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள் ஆச்சே.

அவர்களையும் நாம்குற்றம் சொல்லமுடியாது; பாதிக் குற்றம் படிக்கின்ற மாணவர்கள் மேல்தானே இருக்கிறது.

அவர்கள் நேராக இடையில் எதையும்வேடிக்கையும் பார்க்காமல் பள்ளிக்கு வந்தால் பிரச்சினையே இல்லை.

படிக்கும் பிள்ளைகள் சிலர் புளிய மரத்தில் கல்லெறிந்து பழங்களை தின்னவும்

சிலர் மாமரங்களில் மாங்காய்களைப் பறித்து தின்னவும் சிலர் கண்மாயில் ஓடும் மீன்களைப் பார்க்கவும்

தோப்பகளில் விளையாடி வரவும் சிலர் பட்டாம் பூச்சிகளை பிடிக்கவும்போன்ற பொழுது போக்கி பள்ளிக் கூடத்துக்கு தாமதமாக வருகிறார்கள்.

இது அவர்களின் அறியாமை அல்லவா? இந்த அறியாமையால் மாணவர்களின் படிப்பும் கெட்டதால்

பொறுப்புள்ள பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை டவுனுக்கு படிக்க அனுப்பி விட்டனர்.

இதனால் நமது பள்ளிக்குத் தானே அவப்பெயர்.

தோப்புகளாய் அடர்ந்திருந்த மாணவர்கள் இன்று தனித்தனி மரங்கள்போல் வருகிறார்கள். அதுவும் ஒரு விரக்தியில வெறுமை முகத்தோடு வருகிறார்கள்.அதுவும் பெற்றோருக்குப் பயந்த மாணவர்கள் மட்டும் வருகிறார்களே. பழைய படி கலகலப்பாகவும் மாணவர்கள் குதூகலமாகவும் வருவதற்கு என்ன செய்யலாம் என்று அவர் மனதில் ஒருவழக்காடு மன்றமே நடந்தது

ஒரு மாதம் சென்றது.

அந்தக் கிராமத்து நடு நிலைப் பள்ளிஅன்று களைக்கட்டிஇருந்தது.

ஆம் வாழை மரம் கட்டிபள்ளிக்கூடத்தின் வாசலில் ஒரே வண்ண வண்ண கோலங்கள் தோரணைகள் கட்டி அமர்க்களமாகக் காணப்பட்டது

பள்ளியின் சுவரில் வெள்ளையடிக்கப்பட்டு பளிச்சென்று இருந்தது.

குழந்தையை சீராட்டி அழகான ஆடைகள் அணிவித்து அழகு பார்ப்பது போல்அந்த நடுநிலைப் பள்ளி காண்போர் கண்களை கவர்ந்திருந்தன.

அந்தத் தெருவே அழகாக காணப்பட்டது.

இது என்ன மாயமாமந்திரமா பள்ளிக்கூடமே அன்று மட்டும் பள்ளிக்கூடமே அதிசயமாக பார்க்கபட்டது.

அது மட்டுமா பள்ளிக் கூடத்திலிருந்து பாடம் படிக்கும் சத்தங்களும்கேட்டுக்கொண்டி ருந்தது.

மலையடி வாரத்தில் குடியிருப்பவர்களும் மாணவர்களின் பெற்றோர்களும் எதோ திருவிழாவிற்கு வந்தவர்கள் போல் உற்சாகமாக ஒரே ஆர்ப்பாட்டமாக பள்ளிவெளியில் போட்ட பந்தலில் கீழ் இருக்கையில்அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்

அந்த கிராமத்தில் உள்ள சிலர் ஒன்றும் புரியாமல் விழித்தனர்.கூடவே ஒலி பெருக்கியில் பாடல்கள் ஒலித்துக் கொண்டிருந்தது

சிறுது நேரம் சென்றது. பந்தலில் இருந்த சிறு மேடையில் இருக்கைகள் போடப்பட்டன

கிராமத்தில் உள்ளவர்கள் பள்ளியில் போடப்பட்ட பள்ளி அருகே வந்தனர்.

தலைமை யாசிரியர் மற்றும் வகுப்பாசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்களும்குறிப்பாக தனபால் ஆசிரியரும் வந்துமேடையில் அமர்ந்தனர் மற்றவர்கள் கீழேஅமர்ந்தனர்

சிறிது நேரம் சென்ற பின்னர் எல்லோரும் வந்ததும் மேடையில் ஒலிவாங்கி இணைக்கப்பட்டது

மேடையில் தலைமை ஆசிரியர் வகுப்பாசிரியர்களும் ஊர்த்தலைவர்களும் அமர்ந்தனர் பிறகு

ஒருவர் ஒலி வாங்கியில் ஹலோ மைக் டெஸ்ட் என்று பேசிஎல்லோரையும்அமைதி படுத்தி

ஊர்த்தலைவர்கள் சிலர் பேசினார்கள்.பிறகு வகுப்பாசிரியர்கள் பள்ளியைப் பற்றிப் பேசினார்கள்.

அவர்கள் பேசிமுடித்ததும் கரவொலி தட்டி கிராமத்து மக்கள் உற்சாகப்படுத்தினர்.

பிறகு தலைமையாசிரியர் பேசத் தொடங்கினார்

இந்தப் பள்ளி பழையப் பள்ளி என்பது உங்களுக்கு நல்லாவே தெரியும் ஒரு காலத்தில் இந்தப் பள்ளி மிகவும் சுறு சுறுப்பாக இயங்கிய பள்ளி. நாளடைவில் இங்கேபடிக்கும் மாணவர்கள் வருகை திடீரெனக் குறைந்தது

அதுக்கு என்னக் காரணம் என்று ஆராய்ந்து பார்த்தோம். அதில் சில மாணவர்களின் கவனம் விளையாட்டில் சென்றது

வீட்டில் பெற்றோர்கள் பிள்ளைகளை பொறுப்பாகத் தான்பள்ளிக்கு அனுப்பினர் ஆனால் மாணவர்கள் நேராக பள்ளிக்கு வராமல் இடையில் மாங்காய்களை பறித்தும் தென்னந்தோப்பில் விளையாடியும் கண்மாயில் மீன்களை பார்த்தும் பொழுது போக்கிவிட்டு பிறகு பள்ளிக்கூடத்துக்கு தாமதமாக வந்தார்கள்.

இதைப் பார்த்த நாங்கள் மாணவர்களைகண்டித்தோம்; பல மாதங்களாக அவர்கள் இப்படிச் செய்ததால் பெற்றோருக்கு நாங்கள் தகவல் சொன்னோம். இருந்தாலும் மாணவர்கள் கேட்காமல் திரும்பவும் அதே தவற்றை செய்த தால் வேறு வழி யில்லாமல் பெற்றோர்கள் அவர்கள் படிக்க வைக்க டவுனில் உள்ள பள்ளியில் சேர்த்தனர். பாதிப் பேர் டவுனில் தங்கி படிக்க ஆரம்பித்தனர்

சரி அங்கேயாவது ஒழுங்காகப் படிப்பார்கள் என்று பார்த்தால் அங்கேயும் சரியாப் படிக்காமல் அலட்சியமாக இருந்திருக்கிறார்கள்.

இதைப் பார்த்து மனம்வேதனைப் பட்ட நமது பள்ளியாசிரியர் தனபால் என்னிடம் முதலில் சொன்னார்.

பிறகு மாவட்ட கல்வி அதிகாரி கிட்ட தகவல் சொல்லி அதுக்கு முன்னாடி தனபால் மாணவர்களின் பெற்றோருக்கு தகவல் சொல்லி

பள்ளியில் படிக்கும் இருக்கின்ற மாணவர்களையாவது நல்லாபடிக்க வைக்க என்ன செய்யலாமுன்னு யோசனை கேட்டாரு.

படிக்கும் பிள்ளைகள் வீட்டிலிருந்து கிளம்பி நேராக பள்ளிக்கு வராமல் இடையில் தோப்புகளில் விளையாடியும்

மரங்களில் காய்பழங்களை பறிச்சித் தின்னுட்டு வர்றதுனால பள்ளிக் கூடத்துக்கு லேட்டா வர்றாங்க. இதை தடுக்குறதுக்கு வீட்டிலேயிருந்து நேராக பள்ளிக்கூடத்துக்கு ஒரு சின்னவேனை ஏற்பாடு செஞ்சா அந்தவேனுல உட்காந்து வருவாங்க சார் அப்பிடின்னு தனபால் என்கிட்ட யோசனை சொன்னாரு .அது எனக்கும் சரின்னு பட்டது.

உடனே மாவட்ட ஆட்சியாளரை சந்திச்சி அவர்கிட்ட விசயத்தை விளக்கிச் சொன்னோம்.அவரும் படிப்பு விசயத்துக்கு உதவிசெஞ்சி ஸ்பெசலா ஒரு வேனை கொஞ்சநாளைக்கு ஏற்பாடு பண்ணுனாங்க.

இதுக்கெல்லாம் முழுமுயற்சி செஞ்ச கிளாஸ் டீச்சர் தனபால் அவருக்குத்தான் நீங்க நன்றி சொல்லனும்.

இந்தக் கிராமத்துப் பிள்ளைகள் படிப்பு கெடக்கூடாதுன்னு நினைச்சி நல்லகாரியம் பண்ணிநம்ம பள்ளிக்கு பெருமை தேடித்தந்த அவருக்கு எல்லோரும் நன்றிசொல்லி அவர கௌரவ படுத்த வேணுமுன்னு நான்கேட்டுக்குறேன் என்று

தலைமை யாசிரியர் கூறியதும் தனபால் ஆசிரியருக்கு பலத்த கரவொலி எழுப்பினர்.

தனபால் ஆசிரியர்எடுத்த முயற்சியைப் பெற்றோர்களும் ஊர்த்தலைவர்களும் மாணவர்களும் பாராட்டினர்.

இனி அந்தப் பள்ளிமுன்புபோல் செயல்படும் என்று நம்புவோமாக’’ என்றார்.

கரவொலி ஓங்கி ஒலித்தது.

#சிறுகதை #மக்கள்குரல்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *