செய்திகள்

தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.152 உயர்வு

சென்னை, ஜூன் 29–

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.152 உயர்ந்து ரூ.53,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஜூன் மாதம் தொடக்கம் முதலே தங்கம் விலையானது ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. நேற்று முன்தினம் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 280 குறைந்து ரூ.53,000க்கு விற்பனையானது. அதனைத் தொடர்ந்து நேற்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 328 உயர்ந்து ரூ. 53, 328-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ. 41 அதிகரித்து ஒரு கிராம் தங்கம் ரூ. 6666-க்கும் விற்பனையானது.

சவரனுக்கு ரூ.152 உயர்வு

இந்நிலையில் சென்னையில் ஆபரணத் தங்கம் விலை இன்றும் கிராமுக்கு ரூ.19 அதிகரித்துள்ளது. ஒரு கிராம் தங்கம் விலை ரூ.6,685க்கு விற்பனையாகிறது. அதேபோல் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.152 உயர்ந்து ஒரு சவரன் ரூ.53,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலையை பொறுத்தவரையில் 25 ந்தேதி முதல், கடந்த 5 நாட்களாக ஒரே விலையில், அதாவது வெள்ளி ஒரு கிராம் ரூ.94.50 க்கும் கட்டி வெள்ளி ஒரே கிலோ ரூ.94,500 க்கும் விற்பனையாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *