செய்திகள்

தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.680 குறைவு

சென்னை, ஜூன் 22–

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.680 குறைந்து பவுன் ரூ.53,560 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கடந்த மாதத்தில் ஏறுமுகமா இருந்த தங்கம் விலை, இந்த மாதத்தில் ஏற்ற இறக்கமாகவே இருந்து வருகிறது. சென்னையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.640 ஏறி, புதிய உச்சம் தொட்ட நிலையில், நகைப்பிரியர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால், ஏறிய வேகத்திலேயே தங்கத்தின் விலை இன்று இறக்கம் கண்டுள்ளது. இதனால் நகைப்பிரியர்கள் பெரும் உற்சாகம் அடைந்துள்ளனர்.

பவுனுக்கு ரூ.680 குறைவு

இன்றைய விலை நிலவரப்படி ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.85 குறைந்து ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.6695 க்கும் சவரனுக்கு ரூ.680 குறைந்து ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை ரூ.53,560 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளியின் விலையை பொறுத்தவரை கிராம் ரூ.96.50 க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.96,500 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *