சினிமா செய்திகள்

சர்வதேசப் பட விழாவில் 10 விருது குவித்த இயக்குனர்ராஜ்தேவ்: ஸ்ரீகாந்தை அழைத்திருக்கும் துணிச்சல்!


ராஜ்தேவ்: லாஸ் ஏஞ்சல்ஸ் உலக திரைப் பட விழாவில் பத்து விருதுகளுக்கு மேல் பெற்றவர். அமெரிக்காவில் நடைபெற்ற சர்வதேச திரைக்கதை போட்டியில் இந்தியாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ‘”கிஸ் டெத், ஏ ஸ்ட்ரேஞ்ஜர் ஈஸ் வாக்கிங் பை” கதைகளுக்கு சொந்தக்காரர்.
நடுத்தர வயது, நீண்ட அனுபவம், கதை- திரைக்கதை- வசனம்- இயக்கம் ஆகிய 4 பொறுப்புக்களை கையில் எடுத்து இருப்பவர். கொஞ்ச காலம் கண்ணில் படாமல் இருந்த ஸ்ரீகாந்தை ” சத்தம் இன்றி முத்தம் தா” என்று திரில்லருக்கு கைபிடித்து கூட்டி வந்திருக்கிறார் தயாரிப்பாளர் கார்த்திகேயனோடு.
கார் விபத்தில் நாயகி ( பிரியங்கா திமேஷ்) சிக்குகிறார். அது கொலை என்று பிற்பாதியில் அம்பலம். மருத்துவமனையில் சேர்த்து அவருக்கு சிகிச்சை அளிக்கிறான் நாயகன் (ஸ்ரீகாந்த்). அவள் யாரோ- இவன் யாரோ? சட் டென்று நினைவு வந்து சட்டென்று  நினைவு போகும் ” செலக்ட்டிவ் அம்னீசியா ” வியாதி நாயகிக்கு.
“உன் கணவன் தான் நான்” என்று நம்ப வைக்கிறான் நாயகன். ஆரம்பத்தில் நாயகி ஏற்க மறுக்கிறாள் ,பின் ஏற்கிறாள். ஆனால் அது நிஜமல்ல. நாயகியை தீர்த்துக்கட்ட  பணம் வாங்கியிருக்கும் கூலிப்படை ஆள்தான் நாயகன் என்பது தெரிய வருகிறபோது நமக்கு அதிர்ச்சி.
கணவன் யார் , கொலை திட்டம் ஏன், நாயகன் கூலிப்படைக்கு தள்ளப்பட்டது ஏன்?- கேள்விகளுக்கு விடை தருகிறார் ராஜ் தேவ்.
இப் போது திரைக்கு வருகிற கதைகளில் கொலையே பிரதானம். கத்தி , அரிவாள் கையில் எடுத்தால் குத்து குத்து குத்து குத்தோ என்று குத்தி, ரத்தம் பீறிட்டுத் தெளிக்கும் வன்முறை கொப்பளிக்கும் திரைக்கதை. குலை நடுங்க வைக்கும். ஆக் ஷன் ரசிகர்களுக்கு, இது தீனியா இல்லையா… என்று கேள்வி எழுப்பும் இயக்குனர் கூட்டத்தில் ராஜ் தேவும் ஒருவர்.
மருத்துவமனையில் இருந்து காணாமல் போன நாயகி- அடுத்தடுத்து  நடத்தும் கொலைகள்- பின்னணி யார்? கேள்விகளுக்கு விடை தேடி, இவன் தான் கொலையாளி என்று அடையாளம் கண்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்.
ஸ்ரீகாந்த், இன்ஸ்பெக்டர் ஹரிஷ் பெராடி, கொலைக்கு ஸ்ரீகாந்த இடம் பணம் கொடுக்கும் வியான் மூவருக்கும் இடையில் நடக்கும் யுத்தம்: ” சத்தம் இன்றி முத்தம் தா”.
ஸ்ரீகாந்த் அன்று எப்படியோ இன்றும் அப்படியே நடிப்பில். கொஞ்சமும் அலட்டல் இல்லை, நிஜத்திலும் -நிழலினும்.
பிரியங்கா திமேஷ் குடும்பப் பாங்கான முகம். ஸ்ரீகாந்த் உடன் வியான் கிளைமேக்ஸ் ஸ்டண்ட் காட்சிகள்: மிராக்கிள் மைக்கேல், கைதட்டல் விழும்.
ஜூபின்  இசையில் விவேகாவின் பாடல் ” செம்பரம் பாக்கம் ஏரி நிறைய தண்ணி இருக்கு…” ஆண்ட்ரியா வின் குரல் கிக் ஏற்றும், அதற்குப் போட்டா போட்டியில் சூடேற்றும் கவர்ச்சி நடிகை. விவேகாவின் வரிகள் சென்சார் கத்திரியில் தப்பியதே? திரில்லர்  படத்துக்கான பின்னணி இசை அருமை.
கார்த்திகேயனின் (தயாரிப்பாளர்) முயற்சியை, தைரியத்தை பாராட்ட வேண்டும். மார்க்கெட் ” ட ல்” அடித்த நிலையிலும், ஸ்ரீகாந்ததை பிடித்து, எடுத்து, படத்தை முடித்து திரைக்கும் கொண்டு வந்து விட்டாரே…?
புலன் விசாரணைக்கு வரும் போலீஸ் அதிகாரி பேசும் வசனம் ஆங்கிலத்திலேயே அதிகம் இருப்பதா?
திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருந்தால் இடை இடையே விழும் தொய்வு தவிர்க்கப்பட்டு இருக்கும்!


வீ ராம்ஜீ 


Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *