வாழ்வியல்

அனைத்து துறையிலும் இளைஞர்கள் புதியன படைக்க வேண்டும்!–1

Spread the love

இன்று காலம் மாறி வருகிறது. எங்கும் புதுமை, எங்கும் புதிய கண்டுபிடிப்புகள் என மாற்றம் ஏற்பட்டு வருகிறது. யுரேகா என்றால் என்ன? ஆர்க்கிமிடிஸ் அவர்கள் ” யுரேகா ” என்று குரல் எழுப்பினார். ஏன்? புதிதாக ஒரு விஷயம் கண்டுபிடிப்பதற்கான உற்சாகத்தில் வெளிப்பாடு மட்டுமல்ல, அந்த வார்த்தைக்கு அர்த்தம் ” புதுமை, புதியன கண்டல்; புதிய அனுபவம் ” இதற்கான வெளிப்பாடு ஆகும்.

ஒவ்வொரு வளர்ச்சிக்கும் அடித்தளம் “புதுமையாக்கம்” ஆகும். நெருப்பு, சக்கரம், ஆயுதம் வேளாண்மை, விளையாட்டு, சமையல், இப்படி எதை எடுத்துக்கொண்டாலும் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட சிந்தனை / கூர்நோக்கு / விருப்பத்தில் இருந்து வந்ததுதான். சமீப காலத்தில் உலகம் முழுவதும் மனிதகுலம் ஒவ்வொரு அசைவிலும் நடவடிக்கையிலும் புதுமையை படைத்து வருகிறது.

விவசாயம், அறிவிய, விண்வெளி, ஆய்வு, தகவல் தொழில்நுட்பம், சுகாதாரம், கல்வி, போக்குவரத்து, , தொலைபேசி, டெலிவிஷன் போன்ற அனைத்து முக்கியத் துறைகளிலும் புதுமையாக்கம் நல்ல பலன் தந்துள்ளது. இன்று அறிவியல் தொழில்நுட்ப துறையில் புதிய பல பொதுமக்கள் புதுமையாக்கங்கள் அதிகம் நடந்துள்ளது. அவற்றில் பல சாதாரண மனிதனின் வாழ்வோடும், தினசரி நடைமுறை வாழ்க்கையிலும் ஆழமாய்ப் பின்னிப் பிணைந்துள்ளன.

ஒரு காலத்தில் இந்தியாவில் மழை பொய்த்தது. அதன்பின் பசுமை புரட்சி வெடித்தது. உணவு இறக்குமதியானது நிறுத்தப்பட்டு, விவசாயத்தில் புதுமை புகுத்தப்பட்டு, இயந்திரங்கள், நவீன அணைகள், புதிய விதைகள், புதிய உரங்கள், நவீன விவசாயம் வந்தது. உற்பத்தி பன்மடங்காகியது. மக்கள்தொகை 2 மடங்காகி 135 கோடியை தொட்டது. ஏற்றுமதியில் உணவுப்பொருட்கள் உச்சம் தொட்டது. இப்படி விவசாயத்தில் மட்டுமல்ல விண்வெளி அறிவியல் மூலம் செயற்கைகோள்கள், ஆகியவற்றில் புதுமைகள் வந்தன.

தொலைத்தொடர்பு, ஊரகப் பகுதிகள் இணைப்பு, மீன் வளம் கண்டறிதல், காலநிலை முன்னறிவிப்பில் மாற்றம் வந்தது. இப்படி பல முன்னேற்றங்களைப் பார்க்கும்போது மத்திய – மாநில அரசுகள் புத்தாக்க, நவீன, புதுமையாக்கங்களை இந்திய அரசும், மாநில அரசும் ஊக்குவிப்பதை உணர்கிறேன்.

இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சக புதுமையாக்க கூடம் (M.I.C) புதுமையாக்க சாதனை அமைப்புகளுக்கான ” அடல் தரவரிசை ” (A.R.I.I.A), G.I.A.N. S.P.A.R.C., போன்ற பல திட்டங்கள் நம் இந்திய இளைஞர்களின் புத்தாக்க சிந்தனைகளை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன. இதேபோல் ஸ்டார்ட்அப், முத்ரா, ஆஸ்பைர், ஸ்மெல் என ஏராளமான புதிய கடன் திட்டங்கள், தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டங்கள், திறன் மேம்பாட்டு திட்டங்கள் தொழில் முனைவோர் பல கோடி பேரை உருவாக்கி வளப்படுத்தி விட்டது.

விவசாயிகளுக்கு நிதி உதவி, புதிய பயிர் காப்பீட்டு திட்டங்கள், நவீன சுகாதாரதிட்டம், ரெயில்வேயில் நவீனம், எங்கும் 6 வழி / 8 வழி சாலைகள், மெட்ரோ ரெயில் போக்குவரத்து, புதிய கல்விக் கூடங்கள், ஏராளமான ஸ்காலர்ஷிப் திட்டங்கள் என சமுதாயத்தில் பெரிய மாற்றம் வந்து விட்டது. இளைஞர்கள், மாணவர்கள் மனப்பாடக் கல்வியில் இருந்து மாறி வருகின்றனர். விஞ்ஞானம், ஆராய்ச்சி, நவீன ஆயுதங்கள், உள்நாட்டிலேயே போர் விமான தயாரிப்பு என அனைத்தும் புதுமையாய் மாறி, புதுமைப் படைத்து வருகிறோம். தனிப்பட்ட விஞ்ஞானிகளின் முயற்சியாக இது நின்றுவிடக் கூடாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *