சினிமா செய்திகள்

‘கொரோனா’ வந்தது; மறுமலர்ச்சி தந்தது; சினிமாவிலும் ‘ஒர்க் ஃப்ரம் ஹோம்’ வென்றது!

* ‘ஆன்லைன்’ ரிகசர்சல் * ‘ஆன்லைன்’ ஆக்க்ஷன் * ‘ஆன்லைன்’ எடிட்டிங் * ‘ஆன்லைன்’ டைரக்க்ஷன்

‘கொரோனா’ வந்தது; மறுமலர்ச்சி தந்தது; சினிமாவிலும் ‘ஒர்க் ஃப்ரம் ஹோம்’ வென்றது!

கவுதம் மேனன், சுகாசினி மணிரத்னம் அனுபவம் புதுமை

உயிர்க்கொல்லி கொரோனா வைரஸ் எதிரொலியாக மார்ச் மூன்றாவது வாரத்திலிருந்து தமிழகம் முழுவதும் திரை அரங்குகள் மூடப்பட்டன. சினிமா துறை சம்பந்தப்பட்ட அனைத்து பணிகளும் ஸ்தம்பித்துப் போனது.

பின்னர் அரசின் நிபந்தனைகள், கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு திரை அரங்குகள் திறக்கப்பட்டுள்ளன. 100 சதவிகிதம் பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி தரப்பட்டுள்ளது. குறிப்பிட்ட எண்ணிக்கையில் தொழிலாளர்கள் பணிபுரிய வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் ஷூட்டிங்கும் மற்ற திரைப்பட பணிகளும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில், பிரபல டைரக்டர்கள் கவுதம் மேனன், விக்னேஷ் சிவன், சுகாசினி மணிரத்தினம், சுதா கொங்கரா ஆகியோர் அடுத்த கட்டத்திற்கு அடி எடுத்து இருக்கிறார்கள்.

நெட் – பிளிக் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்பட்ட பாவக்கதைகள் (4 படைப்புகளின் திரட்டு) என்னும் சினிமாவை இயக்கி ஓடிடி தளத்தில் வெளியிட்டு இருக்கிறார்கள்.

‘‘வான்மகள்’’: இது கௌதம் மேனன் இயக்கத்தில் உருவானது. கொரோனா வைரஸ் பரவுவதற்கு முன்னால் படமாக்கப்பட்டது. தயாரிப்பு ஷூட்டிங் முடித்த பிறகு அதற்கு அடுத்து வரும் போஸ்ட் ப்ரொடக்ஷன் (தயாரிப்புக்கு பிந்தைய) பணிகள் டப்பிங் ரிக்கார்டிங் – மிக்சிங் – ஆகியவை அவ்வளவு லேசுப்பட்ட காரியமல்ல.

நான் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டே ஆன்லைனில் என் டெக்னீஷியன்களை தொடர்பு கொண்டு வேலை வாங்கினேன். ஆன்லைன் எடிட்டிங் – ஆன்லைன் டப்பிங் – ஆன்லைன் ரெக்கார்டிங் – முயற்சியும், புதுப்புது தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தும் அறிவும், பயிற்சியும் இருந்தால் எல்லாமே சாத்தியம் என்பது நிரூபணமானது.

ஒரு படம் தயாரிக்க நீண்ட காலம் தேவை இல்லை என்பதை இதன் மூலம் உணர்த்தியது எல்லாமே சாத்தியம் என்பதையும் உணர வைத்தது’’ என்கிறார் டைரக்டர் கௌதம் மேனன்.

வீடியோ காலில் டப்பிங் பேசினார்கள்

நம் கையில் திறமைசாலி கலைஞர்களும் தொழில்நுட்பக் கலைஞர்களும் இருந்தால் போதும், எல்லாமே சாத்தியம். நமக்கு சிரமமே இருக்காது என்பதை நான் உணர்ந்தேன்.

லவ் பண்ண உட்காரணும் இது நான் எடுத்துக் கொடுத்த படம்: பாவக்கதைகள் தொகுப்பில் இதுவும் ஒன்று. வீடியோ காலில் நடிகர் நடிகைகளை மற்றும் டப்பிங் கலைஞர்களை அழைத்து டப்பிங் பேச வைத்தோம் அதுவும் ஆன்லைனில். பிரச்சனையே இல்லாமல் போனது. நேரில் கண் எதிரில் ஸ்டூடியோவில், டப்பிங் தியேட்டரில் எப்படி இருக்குமோ… அப்படித்தான் பணியில் நாங்கள் இருந்தோம். எந்தப் பிரச்சனையும் எழவில்லை எங்களுக்கு. வித்யாசமே தெரியவில்லை. ஒவ்வொருவரும் தொலைதூரத்தில் இருந்தாலும் ஆன்லைனில் இணைந்தோம், என்று மகிழ்ச்சியோடு சொல்கிறார் விக்னேஷ் சிவன்.

சுருதிஹாசனுக்கு ஆன்லைனில் ஒத்திகை

சுகாசினி மணிரத்தினம் அமேசான் பிரைம் நிறுவனத்துக்காக எடுத்த படம் புத்தம் புதுக் காலை. இப்படத்தின் பெரும்பான்மை – முக்கிய காட்சிகளை ஆன்லைனிலேயே தான் தொலைதூரத்தில் இருந்து எடுத்தோம். முடித்தோம். எனக்கு கிடைத்த கலைஞர்கள் அற்புதமான கலைஞர்கள். அதில் சிறந்தவர் கேமராமேன் விஜயன் வின்சன்ட்.

ஐதராபாத்தில் இருந்தபடியே நான் சொன்னதை எனக்குத் தேவைப்பட்ட காட்சிகளை படம் பிடித்தார் நான் விரும்பியபடியே.

சுருதிஹாசன் கமலின் மகள் ஆன்லைனில் ஒத்திகை பார்த்தார். கொரோனா வந்தாலும் வந்தது, அது எங்களை ஒரே இடத்தில் முடக்கிப் போட்டது. பரீட்சார்த்த முயற்சி – விதையை விதைக்க வைத்துள்ளது. கைக்கு அடக்கமான நடிகர் நடிகைகளை வைத்துக் கொண்டு தொலைதூரத்தில் இருந்தபடி இயக்கிவிடலாம் ஒரு படத்தை என்ற நம்பிக்கையை வலுப் பெறச் செய்தது. இது எங்களுக்கு புது அனுபவம்…’’ என்று பெருமிதத்தோடு சொன்னார் சுகாசினி.

பத்து பேரைக் கொண்டு படம் பிடித்தேன்

நான் இயக்கிய படம் புத்தம் புதுக் காலை. இது அமேசான் பிரைம் நிறுவனத்துக்காக. அதிகபட்சம் 10 கலைஞர்கள்தான். அவரவர்கள் வேலையை பிரித்துக் கொண்டு செயல்பட்ட விதம் எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது. நெகிழவைத்தது. 185 பேர் வேலை வாங்கியது எங்கே? அது மாதிரி வெறும் பத்து பேரை வைத்து வேலை வாங்கியது எங்கே? எனக்கே ஆச்சர்யமாய் பட்டது. கொரோனாவில் ஏற்பட்ட இந்த அனுபவம் எனக்கு இனி வரும் நாட்களிலும் தொடரும்…’ என்று நெகிழ்ச்சியோடு சொன்னார் சுதா கொங்கரா.

சென்னையில் இருந்தபடி இந்திப் படம் எடிட்டிங்

சென்னையைச் சேர்ந்த பிரபல சினிமா எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத். இந்த ஆண்டில் அதிக படங்களை எடிட் செய்து லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற்றிருப்பவர்.

சென்னையில் இருந்து கொண்டே ‘ஆவிட்’ மூலம் இந்தி படங்களை எடிட் செய்து வருகிறார் 10 வருடங்களுக்கு முன்னால் ஆன்லைன் எடிட்டிங்கில் அடியெடுத்து வைத்தார். அதுவே பின்னாளில் வொர்க் ஃப்ரம் ஹோம். வீட்டிலிருந்து வேலை பார்ப்பது என்பது இவருக்கு பழகிவிட்டது இப்போது முழு நேரமும் வீட்டிலிருந்தே வேலை பார்ப்பதால் அவசர கோலத்தில் அள்ளித் தெளிக்க வேண்டியது இல்லை. ஆற அமர வேலை பார்த்தாலும் எடிட்டிங் பணிகளை சிறப்பாக திறமையாக செய்து காட்ட முடியும் என்று அனுபவம் பேசினார் ஸ்ரீபிரசாத்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *