செய்திகள்

பெங்களூரில் பெண் டி.எஸ்.பி தூக்கிட்டு தற்கொலை

பெங்களூரு, டிச. 17-

பெங்களூரில் பெண் போலீஸ் டி.எஸ்.பி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். பெங்களூர் நகர சி.ஐ.டி. பிரிவில் பணியாற்றி வந்த லட்சுமி (வயது 33) கடந்த 2014–ம் ஆண்டு ஐபிஎஸ் தேர்ச்சி பெற்றார். அதனைத் தொடர்ந்து 2017 முதல் டிஎஸ்பியாக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் அன்னபூரணேஸ்வரி நகரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்ற லட்சுமி, இரவு உணவு அருந்திவிட்டு அறைக்கு ஓய்வு எடுக்கச் சென்றார். ஆனால் வெகு நேரமாகியும் அவர் வெளியே வராததால் சந்தேகமடைந்த உறவினர்கள் கதவை தட்டி அவரை அழைத்தனர். ஆனால் அவர் பதில் ஏதும் பேசாததால் கதவை உடைத்து பார்த்தனர். உள்ளே லட்சுமி தூக்கில் சடலமாக தொங்கிக் கொண்டிருந்தார். அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *