செய்திகள்

தாறுமாறாக ஓடிய லாரி 3 மோட்டார் சைக்கிள்கள் மீது மோதியது: பெண் பலி

திருப்பூர், ஜன. 11–

திருப்பூரில் இன்று காலை தாறுமாறாக ஓடிய டிப்பர் லாரி மோதி மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் ஒருவர் பலியானார்.

திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவிலில் இருந்து டிப்பர் லாரி ஒன்று கல் ஏற்றிக் கொண்டு இன்று அதிகாலை திருப்பூருக்கு வந்து கொண்டிருந்தது.

இந்த லாரி அனுப்பர்பாளையம் அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடியது. மேலும், அந்த வழியாகச் சென்ற 3 மோட்டார் சைக்கிள்களில் அடுத்தடுத்து மோதியதுடன் சாலையோரத்தில் இருந்த கடைக்குள் புகுந்தது.

இதில், ஒரு மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து சென்ற தெய்வானை (75) என்ற பெண் உயிரிழந்தார். இதில், பலத்த காயமடைந்த அவரது மகன் பழனிசாமியை அந்தவழியாக வந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து அனுப்பர்பாளையம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தப்பிச்சென்ற லாரி ஓட்டுநரைத் தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *