வர்த்தகம்

வீட்டுக்குள் யாரும் நுழைந்தால் ‘பிளாஷ்’ அடிக்கும்; சைரன் அலரும்; ஸ்மார்ட் போனுக்கு தகவல் தரும் ‘வை–பை’ கேமரா அறிமுகம்

வீட்டுக்குள் யாரும் நுழைந்தால் ‘பிளாஷ்’ அடிக்கும்; சைரன் அலரும்;

ஸ்மார்ட் போனுக்கு தகவல் தரும் ‘வை–பை’ கேமரா அறிமுகம்

எஸ்விஎஸ் குளோபல் நிறுவனத்தின் தயாரிப்பு

சென்னை, அக்.26

எஸ்விஸ் குளோபல் நிறுவனம் வீடுகள் மற்றும் அலுவலகங்களின் பாதுகாப்புக்கு ஸ்மார்ட் கேமரா மற்றும் பாதுகாப்பு கருவிகளைத் தயாரித்துள்ளது. இவற்றை எளிதில் இணைக்கலாம், நிறுவுவதும் மிகச் சுலபமாகும். இதன் விலை ரூ. 3ஆயிரத்து 149 ஆகும். தேவைக்கு ஏற்ப கூடுதல் கேமரா நிறுவலாம்.

சி4டபிள்யூ கேமராவில் பாதுகாப்பு அம்சம் உள்ளது. நீங்கள் இதில் செட் செய்த கால நேரத்தில் எவரேனும் நுழைந்தால் இந்த வீடியோ கேமராவில் பிளாஷ் விளக்கு ஒளி வெளியாகி எச்சரிக்கை செய்யும். அத்துடன் காதைப் பிளக்கும் சைரன் ஒலியை எழுப்பி மர்ம நபரை மிரண்டோட செய்யும். இதில் சைரன் ஒலி வெளியான உடனேயே உங்கள் ஸ்மார்ட்போனுக்கு இது குறித்த எச்சரிக்கை அழைப்பையும் இது அனுப்பும். உடனேயே நீங்கள் இருக்குமிடத்திலிருந்து எடுக்க வேண்டிய நடவடிக்கையை தீர்மானிக்க உதவும்.

இருவழி தகவல் தொடர்பு வசதி கொண்டதாக இந்த கேமரா வடிவமைக்கப் பட்டுள்ளது. இதனால் மைக்ரோபோன் மற்றும் ஸ்பீக்கர் உள்ளது. இத்துடன் உங்கள் ஸ்மார்ட்போனில் பதிவிறக்கம் செய்யப்பட்ட எஸ்விஸ் மூலம் உங்கள் ஸ்மார்ட்போனிலிருந்தே பேச முடியும். அதேபோல வீட்டிலிருப்பவர்களுடன் உலகின் எந்த பகுதியிலிருந்தும் நீங்கள் தொடர்பு கொண்டு பேச முடியும்.

பொருள் அசைவை துல்லியமாக கண்டுபிடிக்கும் மோஷன் டிடெக்டர் நுட்பம் உள்ளது. இதனால் மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகள் உள்ளிட்டவை நுழைந்தாலும் அதை எளிதில் கண்டுபிடித்து உங்களது ஸ்மார்ட்போனுக்கு தகவலை அனுப்பிவிடும். துல்லியமான படங்கள் பகல் மற்றும் இரவு நேரங்களிலும் இதில் தெளிவாகப் பதிவாகும். வீடியோ காட்சிகளை பதிவு செய்ய இதில் உள்ள எஸ்டி கார்டில் 256 ஜிபி வரை காட்சிகளை பதிவு செய்து கொள்ளலாம். லான் போர்ட் மூலம் கேபிள் வாயிலாகவும் இதை இணைக்கலாம். இது தவிர கிளவுட் ஸ்டோரேஜ் வசதி உள்ளது. இது மிகவும் பாதுகாப்பாக உங்கள் வீடியோ காட்சிகளை சேமித்து வைக்க உதவும்.

இது பற்றி அறிய www.ezvizlife.com என்ற வலைதளத்தைப் பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *