வாழ்வியல்

அதிகாலையில் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மை என்ன?

அதிகாலையில் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகளை அறிய தொடர்ந்து படியுங்கள்.

உடலின் மெட்டபாலிசம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இது நோய்களை எதிர்த்து போராட உதவும். எந்த நோயும் அவ்வளவு எளிதில் நம்மை அண்டாது.நீங்கள் குடிக்கும் தண்ணீரானது உடலுக்குள் உணவுப்பாதை வழியாக‌ சென்று மூலை முடுக்குகளில் தேங்கியிருக்கும் உடலில் தங்கியுள்ள நச்சுக்கள், தேவையற்ற கொழுப்புக்களை கரைந்து சிறுநீர் மூலமாக வெளியேற்றி உடல் எடை குறைய உதவியாக இருக்கும்.அதோடு பசியையும் தூண்டிவிடும்.

இதனால் இரத்த சிவப்பணுக்கள் வளர்ச்சி அதிகரித்து இரத்தமானது ஆக்ஸிஜன் அதிகளவில் உள்ளிழுக்கும். இதனால் உடலானது சோர்வடையாமல் எப்போதும் கூடுதல் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும்.

குறிப்பாக நீர்ச்சத்து பற்றாக்குறையுடன் இருப்பவர்கள் தினந்தோறும் அதிகாலை வேளையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வந்தால், உடலின் நீர்ச்சத்தானது அதிகரித்து தலைவலி உட்பட சில நோய்களின் வீரியத்தையும் குறைக்கும். அதோடு அல்சர் போன்ற வயிற்று பிரச்சனை ஏற்படாமல் தடுக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *