வாழ்வியல்

உப்பு அதிகம் சாப்பிட்டால் உடலில் என்னென்ன பிரச்சினைகள் உண்டாகும்?

உப்பு சத்து என்பது அன்றாட உடல் ஆரோக்கியத்தில், உடல் செயல்பாடுகளுக்கு மிக முக்கியமானது. அதாவது உப்பில் உள்ள சோடியம் சத்து தான் உடலில் உள்ள ஒவ்வொரு செல்களில் நடக்கும் செயல்களுக்கும் அவசியம். ஆனால் அதே சோடியம் சத்து அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்ளும் பொழுது உடலில் உள்ள ஒவ்வொரு செல்லும் பாதிக்கப்படும் என்பது உண்மை.

இதன் பாதிப்பு வெளியில் தெரியாமலேயே இருந்து விடும். இறுதி நிலையில் சிறுநீரகக் கோளாறு அல்லது இரத்தக் கொதிப்பாக மாறிவிடுகிறது. உடலில் உப்பு அதிகம் சேர்வதால் சிறுநீரக கற்கள் உருவாகும். அதேபோன்று நீரிழிவு நோய் ஏற்படக் காரணமாகவும் அமையும். இதனால் மருத்துவர்களின் அறிவுரைப்படி ஒருவர் ஒரு நாளைக்கு இரண்டு ஸ்பூன் உப்பை மட்டுமே உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

உடலில் சோடியத்தின் அளவு அதிகரிப்பது நல்லதல்ல என்றும் அதிலும் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் ஒரு ஸ்பூன் உப்பு மட்டும் சேர்த்து கொள்ளவேண்டும் என்றும் உயர் ரத்த அழுத்த நோய்க்கு முதல் எதிரி உப்புதான் என்றும் கூறப்படுகிறது. முட்டி, பாதம் மற்றும் கைகளில் வீக்கம் இருந்தால் அது நீருக்காக கூட இருக்கலாம். அதாவது உடலில் அதிகளவு சோடியம் சேரும் பொழுது உடலில் இருக்கும் நீரின் அளவை குறைக்கும்.

இதன் விளைவாக கை மற்றும் கால்களில் வீக்கங்கள் ஏற்படும். எனவே அதிக அளவு உப்பு சேர்ப்பதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். அடுத்து ரத்தத்தில் உப்பு அதிகம் சேர்ந்தால் அதை நீர்த்துப் போக ரத்தத்துடன் நீர் சேர்ந்து கொள்ளும். இதனால் சூழ்ந்திருக்கும் இரத்தத்தின் அளவும் அதிகரிக்கும். இதனால் இரத்த குழாய்களில் அழுத்தம் அதிகரித்து இதயம் செயல்திறன் கூடும்.

இதனால் அதிக ரத்த அழுத்தம் உருவாகி பக்கவாதம், மாரடைப்பு ஏற்படும் என்றும், இந்நிலை தொடர்ந்தால் இதயம் செயலிழப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது. அயோடின் குறைவாக இருப்பவர்களை தவிர மற்றவர்கள் அதிகம் எடுத்துக்கொண்டால் நன்மைகளை விட தீமைகளே அதிகமாகும். இதனால் ஹைப்பர் தைராய்டு நோய்கள் உருவாக வாய்ப்புகள் அதிகம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *