மேல்மருவத்துார், மார்ச். 1–
ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், பங்காரு அடிகளாரின் 81வது பிறந்த நாள் விழா மார்ச் 3ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சிறப்பு வேள்வி பூஜை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, நேற்று, அதிகாலை 3 மணிக்கு, மங்கல இசையுடன், ஆதிபராசக்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவர், லட்சுமி பங்காரு அடிகளார் முன்னிலையில், நடைபெற்றது. அன்னதானத்தை கே.பா. செந்தில்குமார் துவக்கினார். சித்தர் பீடம் வந்த அடிகளாரை, பக்தர்கள் வரவேற்றனர். மாலை, 4 மணிக்கு, சிறப்பு கலச விளக்கு வேள்வி பூஜை நடந்தது.
இன்று, பக்தர்களுக்கு, அடிகளார் ஆசி வழங்குகிறார். மக்கள் நலப்பணி விழா மற்றும் அடிகளார் பிறந்த நாள் விழா, மலர் வெளியீட்டு விழா நடக்கிறது. இதைத் தொடர்ந்து, 3ம் தேதி, அதிகாலை 3 மணிக்கு, ஆதிபராசக்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், மலர் அலங்காரத்தில், வீட்டிலிருந்து, அடிகளாரை, பக்தர்கள், சித்தர் பீடம், அழைத்து வருகின்றனர்.சித்தர் பீடத்தில், அடிகளார், பக்தர்களுக்கு, ஆசி வழங்குகிறார். விழா ஏற்பாடுகளை, மேல்மருவத்துார் ஆதிபராசக்தி இயக்கம், சேலம், நாமக்கல் மாவட்ட, மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் சக்திபீடங்கள் மற்றும் வழிபாட்டு மன்றத்தினர் செய்து வருகின்றனர்.