செய்திகள்

பங்காரு அடிகள் பிறந்த நாளில் 1200 பேருக்கு ரூ.1.5 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

பங்காரு அடிகள் பிறந்த நாளில் 1200பேருக்கு ரூ.1.5 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

மாணவிகளுக்கு இலவச லேப்டாப் வழங்கப்பட்டது

நீதிபதி பாஸ்கரன் பங்கேற்பு

மேல்மருவத்தூர், மார்ச். 3–

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை நிறுவிய பங்காரு அடிகளாரின் 81வது பிறந்த நாள் விழா கடந்த 28ந் தேதி மங்கள இசையுடன் தொடங்கியது. அன்று சித்தர் பீடம் வந்த அடிகளாரைசேலம் மற்றும் நாமக்கல் பக்தர்கள் பாத பூஜை செய்து வரவேற்றனர்.

ஆன்மீக இயக்க துணை தலைவர் ஸ்ரீதேவி ரமேஷ் கலச விளக்கு வேள்பி பூஜையை தொடங்கி வைத்தார். 2ம் நாள் நிகழ்ச்சியாக நேற்று முன் தினம் வெள்ளி ரதத்தில் பக்தர்கள் பங்காரு அடிகளாரை சித்தர் பீடம் அழைத்து வந்தனர். ஆதிபராசக்தி குழும கல்வி நிறுவனங்களின் கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள் ஆசி பெற்றனர். தொடர்ந்து திரைப்பட பின்னணி பாடகி அனுராதா ஸ்ரீராமின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

3ம் நாள் நிகழ்ச்சியில் விழுப்புரம், கடலூர் மாவட்ட பக்தர்கள் அடிகளாருக்கு பாத பூஜை செய்தனர். மாநில மனித உரிமை ஆணை தலைவர் பாஸ்கரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் சிறப்புரையாற்றினார்.

10 ஆயிரம் மரக்கன்றுகள், ஆம்புலன்ஸ் வாகனம், அரசு மருத்துவமனை, அரசு பள்ளிகளுக்கு குடிநீர் சுத்திகரிப்பு கருவி, மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர சைக்கிள், மடிக்கணினி, ஆட்டோ, திருவண்ணாமலை கிரிவலப் பாதை பக்தர்களின் பயன்பாட்டுக்கு குளியலறை மற்றும் கழிப்பறை கட்டித் தருதல், மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை, பெண்களுக்கு ஸ்கூட்டர், மிதிவண்டி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மொத்தம் 1,200 பேருக்கு ரூ.1.5 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டன. ஒரு ஏழை ஜோடிக்கு இலவச திருமணம் செய்து வைத்து சீர் வரிசை பொருட்களும் வழங்கப்பட்டன. இந்த உதவிப் பொருட்களை பங்காரு அடிகளார் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க துணை தலைவர் ஸ்ரீதேவி ரமேஷ், மருத்துவ பண்பாட்டு அறநிலைய அறங்காவலர் உமாதேவி ஜெய்கணேஷ், மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் ரமேஷ், வழக்கறிஞர் அகத்தியன் ஆகியோர் பங்கேற்றனர்.

விழாவுக்கான ஏற்பாடுகளை சேலம், நாமக்கல் மாவட்டங்களின் ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றங்களின் செவ்வாடை பக்தர்கள் செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *