செய்திகள்

இளைஞர் பாசறை மன்றம்: ராஜேஷ் திறந்து வைத்து நலத்திட்ட உதவி

சென்னை, அக்.18–

அண்ணா தி.மு.க. 49–ம் ஆண்டு தொடக்க விழாவை யொட்டி பெரம்பூர் பகுதி 44 வது வட்டத்தில் இளைஞர் பாசறை மன்றங்களை திறந்து, மாவட்ட செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அண்ணா தி.மு.க. 49 ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி வடசென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டம் பெரம்பூர் பகுதி 44 வது கிழக்கு, மேற்கு, வட்டம் கக்கன்ஜி நகர், நட்டால் தோட்டம் பகுதியில் இளைஞர், இளம்பெண்கள், பாசறை மன்றம் திறப்பு விழா நாம்கோ கூட்டுறவு தலைவர் வியாசை எம்.இளங்கோவன் ஏற்பாட்டில் நடைபெற்றது.

இதில் மாவட்ட கழக செயலாளரும் தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையத்தின் தலைவருமான ஆர்.எஸ். ராஜேஷ், பங்கேற்று மன்ற பெயர் பலகையை திறந்து வைத்து கழக கொடியை ஏற்றி வைத்து இனிப்புகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் ஜெ.கே.ரமேஷ், ஜி.ராஜேந்திரன்,எஸ்.மனோகரன், கக்கன்ஜி நகர் அ.வேல்முருகன், சிம்சன் ஆர்.ரமேஷ், வி.பொன்முடி, மணல் ஜெ.ரவிச்சந்திரன், கே.என். கோபால், காந்தி நகர் ஐ.ஜோசப்வின்சென்ட், ஹரிகிருஷ்ணன், ஜெஸ்டின் பிரேம்குமார், உதயம் சீனிவாசன், செல்வி, தாஸ், கே.எச்.பாபு, வி.எம்.மதன், சிலம்பம் ராஜேஷ், மற்றும் பாக பாசறை மன்ற நிர்வாகிகள் உள்பட பலர் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *