செய்திகள்

முத்தியால்பேட்டையில் 10,073 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள்: வி.சோமசுந்தரம் வழங்கினார்

ஜெயலலிதா 73-வது பிறந்தநாள் விழா

முத்தியால்பேட்டையில் 10,073 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள்: வி.சோமசுந்தரம் வழங்கினார்

மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் ஆர்.வி.ரஞ்சித்குமார் ஏற்பாடு

காஞ்சீபுரம், பிப்.24-–

முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாளையொட்டி காஞ்சீபுரம் அருகே முத்தியால்பேட்டையில் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளரும், ஆன்மீக பிரமுகருமான ஆர்.வி.ரஞ்சித்குமார் ஏற்பாட்டின் பேரில் பிரம்மாண்டமான மேடை அமைக்கப்பட்டு, அம்மாவின் படம் வண்ண வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இதில் மாவட்ட செயலாளர் வி.சோமசுந்தரம் கலந்து கொண்டு அம்மாவின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பிறகு,ஆர்.வி.ரஞ்சித்குமார் 73 கிலோ ராட்சத அறுசுவை மிக்க பிரம்மாண்டமான கேக் வெட்டி வந்திருந்த பொதுமக்களுக்கு வழங்கினார். மேலும் அவரது ஏற்பாட்டின்பேரில் ஜெயலலிதாவின் ஏழைகளுக்கு 73 டன் அரிசி மூட்டைகள், 2073 ஏழை பெண்களுக்கு பிரசித்தி பெற்ற காஞ்சீ பட்டு சேலைகள் என 10,073 பேருக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட கழக செயலாளர் வி.சோமசுந்தரம் வழங்கினார்.

தொடர்ந்து, முத்தியால்பேட்டை அரசு பள்ளியில்ஆர்.வி.ரஞ்சித்குமாருடன் 273 பேர் ரத்த தானம் வழங்கினர்.

பிறகு ஆர்.வி.ரஞ்சித்குமார் பேசியதாவது:

அம்மாவின் ஆசியுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மக்களின் நலனில் மிகுந்த அக்கறை எடுத்து சீரிய திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகின்றனர். தமிழகம் வெற்றி நடைபோட்டு பயணித்து கொண்டிருக்கிறது.

‘‘சொல்வதை செய்வோம், செய்வதை சொல்வோம்’’ என்ற அம்மாவின் பொன்மொழிக்கேற்ப இன்று அம்மா அறிவித்து விட்டுச் சென்ற அனைத்து பணிகளையும் தமிழக அரசு செய்து கொண்டிருக்கிறது. கொரோனா காலத்தில் பொருளாதாரம் இழந்த நிலையில், தமிழக மக்கள் மகிழ்ச்சியுடன் பொங்கல் கொண்டாட வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தில், பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.2500 அறிவித்து வழங்கியது நமது அம்மா அரசு மட்டுமே.

தமிழகத்தில் 16.43 லட்சம் விவசாயிகளின் ரூ.12110 கோடி பயிர்க்கடனை தள்ளுபடி செய்து விவசாயிகளின் பாதுகாவலன் என்பதை நமது தமிழக முதல்வர் நிரூபித்துள்ளார்.

எனக்கு பின்னாலும் கழகம் 100 ஆண்டுகள் ஆட்சியில் இருக்கும் என்று அம்மா சொன்னதுபோல், வருகின்ற 2021 சட்டமன்ற தேர்தலில், நாம் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டு 234 தொகுதிகளிலும் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஹாட்ரிக் சாதனை படைத்து அண்ணா தி.மு.க. ஆட்சி அமைக்க சபதம் ஏற்போம் என அம்மாவின் பிறந்தநாளான இந்த நன்நாளில் உறுதியேற்போம்.

இவ்வாறு அவர் பேசினார்

இந்நிகழ்ச்சியில் கழக அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன், அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற நிர்வாகி காஞ்சீ பன்னீர்செல்வம், மாநில எம்.ஜி.ஆர் இளைஞரணி நிர்வாகி எஸ்.எஸ்.ஆர்.சத்தியா, மாவட்ட அவைத்தலைவர் குண்ணவாக்கம் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பூக்கடை ஆர்.டி.சேகர், வழக்கறிஞர் பிரிவு நிர்வாகி அய்யம்பேட்டை கே.சம்பத், ஓய்வு பெற்ற வருவாய்த்துறை அதிகாரி மோகனசுந்தரம், மகளிரணி நிர்வாகி பிரேமாமோகனசுந்தரம், வர்த்தக பிரிவு செயலாளர் வாலாஜாபாத் மார்க்கெட் வி.அரிக்குமார், விவசாய பிரிவு செயலாளர் நாயக்கன்குப்பம் என்.ஆர்.பழனி, இலக்கிய அணி துணை செயலாளர் கவிஞர் எஸ்.முருகவேள், அண்ணா தி.மு.க. நிர்வாகிகள் தும்பவனம் டி.ஜீவானந்தம், எம்.ஏ.வரதப்பசெட்டியார், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மாணிக்கம், நாயக்கன்குப்பம் என்.ஆர்.பழனி, தென்னேரி என்.எம்.வரதராஜூலு, காஞ்சீ மணிகண்டன், காஞ்சீ விடியல் சக்தி, எல்.கே.எஸ்.வசந்தாமணி, ஜெ.நீலாவதி, ஜெயகாந்தன், டில்லி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பிறகு 3073 ஏழைகளுக்கு காலை அறுசுவை உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உஷா என்ற பெண் கூறுகையில், அம்மாவின் பிறந்தநாளில் ஏழைகள் நலம் பெறும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் எங்களுக்கு வயிராற அறுசுவை உணவு வழங்கி நலத்திட்ட உதவிகளை வழங்கும் அம்மா அரசை நாங்கள் என்றைக்கும் மறக்க மாட்டோம். காஞ்சீ பட்டுச் சேலைகள் எங்களுக்கு வழங்கியது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. எங்கள் ஓட்டு எப்போதும் இரட்டை இலைக்கே என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *