செய்திகள்

காதலித்த பெண்ணுடன் மாப்பிள்ளை ஓட்டம்: பாதியில் நின்ற திருமணம்

நாகர்கோவில், நவ.27–

நாகர்கோவிலைச் சேர்ந்த மெக்கானிக் ஒருவருக்கும் பெண் என்ஜினீயருக்கும் திருமண நிச்சயதார்த்தம் முடிந்தது. இந்த நிகழ்ச்சியில் மணமகனும், மணமகளும் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டனர். பின்னர் நேற்று இருவருக்கும் திருமணம் நடத்த இருவீட்டார் சார்பிலும் ஏற்பாடுகள் நடந்தன.

நேற்று முன் தினம் சம்பிரதாயப்படி திருமணத்துக்கு முந்தைய சடங்குகள் நடந்தன. மணமகளின் பெற்றோர் சார்பில் விருந்தோம்பல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மணமகனும் பங்கேற்றார்.

அந்த சமயத்தில் மணமகளுக்கு அதிர்ச்சி தரும் செய்தி வந்தது. அதாவது வெளியே சென்று வருவதாக கூறி வீட்டை விட்டு சென்ற மாப்பிள்ளையை காணவில்லை என்ற செய்திதான் அது. வெகுநேரமாகியும் அவர் வராததால், பெண் வீட்டார் அதிர்ச்சி அடைந்தனர்.

அதன்பிறகு தான், திருமணம் பிடிக்காமல் மாப்பிள்ளை ஓட்டம் பிடித்தது தெரிய வந்தது. இதனால் இருவீட்டாரிடையே ஒருவித சலசலப்பும் ஏற்பட்டது.

மாப்பிள்ளையின் இந்த திடீர் முடிவால் நேற்று நடக்க இருந்த திருமணமும் நின்று போனது. பெண் வீட்டார் தரப்பில் முறைப்படி போலீசிடம் புகார் கொடுக்காததால், போலீசாரும் இந்த பிரச்சினையில் தலையிடவில்லை.

மணமகன் ஒருவரை காதலித்ததாகவும், அவரை திருமணம் செய்வதற்காகத்தான், பெற்றோர் பார்த்த பெண்ணை விட்டு விட்டுச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *