வாழ்வியல்

ஆண்களின் விதைப்பையை பாதுகாக்கும் வழிமுறைகள்–1

Spread the love

விந்தணு உற்பத்தி குறைவாக இருப்பதற்கு , உடல் பலவீனமாக இருக்கிறது என்று யோசிப்பவர்கள், விந்துப்பை பற்றி யோசிப்பதே இல்லை. விந்துப்பையை நலமாக பாதுகாப்பது அவசியம். அதனால், விந்துப்பையை பாதுகாத்து, அணுக்கள் உற்பத்தியை அதிகரிக்கச் செய்வதற்கான வழிமுறைகளை இங்கே பார்க்கலாம்.​

வெகுசில ஆண்களே தங்களுடைய விந்துப்பையின் ஆரோக்கியம் குறித்து எண்ணுகின்றனர். பால் போன்ற ஒரு மெலிதான திரவம் தான் நமது விந்தணுக்களைப் பாதுகாக்கிறது. அந்த திரவம் உருவாகக் காரணமாக இருப்பது விந்துபையாகும். நாம் அதிகமாக விந்தணுவைச் செலவழிப்பதால், உடலில் சில பிரச்சனைகள் உண்டாகும். முக்கியமாக விதைப்பையில் மிகப்பெரிய பிரச்சனைகள் உண்டாகும். ஆற்றல் அதிகமாக செலவாவதால், உடலில் உள்ள திரவத்தன்மை குறையும். மேலும் விந்துபை வீக்கம், விந்துப்பை புற்றுநோய் போன்ற நோய்கள் வரவும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

​சிறுநீறும் தண்ணீரும்

நடுத்தர வயது ஆண்களுக்கு விதைப்பை ஆரோக்கியம் மிகவும் முக்கியம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. எனவே விதைப்பையின் பாதுகாப்பை உறுதி செய்வது நமக்கு மிகவும் அவசியம். விந்துப்பை பாதுகாப்பை உறுதி செய்யக் கீழ்க்கண்ட சில ஆயுர்வேத முறைகளைப் பற்றி அறிந்து கொள்வோம்:

உடலில் உள்ள தண்ணீரின் அளவு குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் அதிகம் தண்ணீர் குடிக்க வேண்டும். நமது சிறுநீர் மஞ்சள் போன்ற நிறத்தில் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும். சிறுநீர் தண்ணீர் போன்று இருந்தால் மட்டுமே உடலில் எந்த கோளாறும் இல்லை என்று அர்த்தம். தண்ணீர் அருந்தாமல் உடல் சூடு ஏறி அதிக நேரம் கழித்து சிறுநீர் கழிப்பதால் சிறுநீரின் நிறம் மஞ்சளாக இருக்கும். அப்படி இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *