கல்லீரலுக்கு ஏற்படும் பிரச்சனைகளை குணப்படுத்த சில வழிகளைத் தெரிந்து கொள்ளுங்கள்.
இந்த மாதிரி கல்லீரல் பாதிப்படைவதற்கு ஆல்கஹால் அதிகம் குடிப்பது, அதிகமான எண்ணெய் உள்ள உணவுகளை சாப்பிட்டு அதனால் கல்லீரலில் கொழுப்புக்கள் அதிகம் சேர்ந்து பாதிப்பை ஏற்படுத்துகின்றன. மேலும் சரியான நேரத்தில் சாப்பிடாமல் இருந்தால் கல்லீரலில் கொழுப்புகள் தங்கிவிடும். கல்லீரல் பாதிக்கப்படும்
கிரீன் டீ
இதில் நிறைய கேட்டசின்கள் இருப்பதால் கல்லீரலுக்கு கிரீன் டீ மிகவும் நல்லது. தினமும் 3 முதல் 4 கப் க்ரீன் டீயைக் குடித்து வந்தால் கல்லீரல் தொடர்பான பிரச்சனைகளுக்கு நிவாரணம் கிடைக்கும்.
பால் நெருஞ்சில் விதை (Milk Thistle Seeds)
பால் நெருஞ்சில் என்று அழைக்கப்படும் மூலிகை பலவிதமான ஈரல் நோய்களைக் குணப்படுத்த வல்லது. வைரல் ஹெப்பாடிட்டிஸ், கைரோசிஸ், ஆல்கஹாலிக் ஹெப்பாடிட்டிஸ் உள்ளிட்ட பலவற்றிற்கும் அருமையான மருந்தாக இம்மூலிகை விளங்குகிறது. தினமும் இருமுறை 900 மில்லிகிராம் அளவில் இந்த மூலிகையை சாப்பாட்டின் போது எடுத்துக் கொள்வது நல்லது. கல்லீரல் பழுதடைந்துள்ளது என்பதை அறிய சில அறிகுறிகள்
உடலில் உள்ள உறுப்புகளில் கல்லீரல் மிகவும் முக்கியமான ஒரு உறுப்பு. ஒரு வேளை கல்லீரல் சரியாக இயங்காவிட்டால் உடனே அதற்கு சரியாக சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.
சில நேரங்களில் கல்லீரல் பாதிக்கப்பட்டிருந்தால் அதைத் தெரிந்து கொள்வது என்பது மிகவும் கடினம். ஏனெனில் கல்லீரல் பாதிக்கப்பட்டிருந்தால், அதற்கு சில அறிகுறிகள் உள்ளன. ஆனால் அந்த அறிகுறிகள் சாதாரணமாக உடலில் அவ்வப்போது வரும் என்பதால் சரியாக அதனை கவனிக்கமாட்டோம். எனவே கவனித்து செயல்படவேண்டும்.