செய்திகள்

வெலிங்டன் நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்கு தண்ணீர்: அமைச்சர் எம்.சி.சம்பத் திறந்தார்

கடலூர், ஜன.11–

வெலிங்டன் நீர்த்தேக்கத்திலிருந்து விவசாய பாசன வசதிக்காக தண்ணீரை இன்று காலை தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் திறந்து வைத்தார்.

கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம், வெலிங்டன் நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட விவசாயப் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆணையிட்டார்.

அதன்படி வெலிங்டன் நீர்த்தேக்கத்திலிருந்து விவசாய பாசன வசதிக்காக மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தலைமையில் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தண்ணீரை திறந்து வைத்து மலர் தூவினார்.

அப்போது அமைச்சர் எம்.சி.சம்பத் பேசியதாவது:–

முதலமைச்சர் உத்தரவுப்படி வெலிங்டன் நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்கு திறந்துவிடப்பட்ட தண்ணீர் இன்று முதல் வினாடிக்கு 130 கனஅடி வீதம் 110 நாட்களுக்கு திறந்து விடபடுகிறது. இதன் மூலம் திட்டக்குடி மற்றும் விருத்தாசலம் வட்டங்களில் உள்ள 23 ஏரிகள் 63 கிராமங்களில் கீழ்மட்ட கால்வாய் மூலம் 9209 ஏக்கர் நிலமும், மேல் மட்ட கால்வாய் மூலம் 14850 ஏக்கர் நிலமும் ஆக மொத்தம் 24059 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. விவசாய பெருங்குடி மக்கள் தண்ணீரினை சிக்கனமாக பயன்படுத்தி கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். நீர்த்தேக்கத்தின் மொத்த நீர்மட்ட உயரம் 29.72 அடி ஆகும். தற்சமயம் 26.80 அடி தண்ணீர் உள்ளது. நீர்த்தேக்கத்தின் மொத்த கொள்ளளவான 2580 மில்லியன் கன அடியில் தற்சமயம் 1860 மில்லியன் கனஅடி தண்ணீ்ர் உள்ளது.

இந்நிகழ்ச்சியில் விருத்தாசலம் சார் ஆட்சியர் பிரவின்குமரர், கண்காணிப்பபுப் பொறியாளர் ரவி மனோகரன், செயற்பொறியாளர் மணிமோகன், வேளாண்மை இணை இயக்குநர்முருகன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளர் ஜெயக்குமார், உதவி செயற்பொறியாளர் கோவிந்தராசு, அரசு அலுவலர்கள் மற்றும் விவசாய பெருமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *