செய்திகள்

அய்யப்பன்தாங்கலில் ஏழைகளுக்கு அன்னதானம்: வாலாஜாபாத் பா. கணேசன் வழங்கினார்

Spread the love

காஞ்சீபுரம், மார்ச் 13–-

ஜெயலலிதாவின் 72-வது பிறந்தநாளையொட்டி, அய்யப்பன்தாங்கலில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள்-மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட மாணவரணி செயலாளரும், தொழிலதிபருமான ஏ.என்.இ.பூபதி ஏற்பாட்டின் பேரில் நடந்த இந்நிகழ்ச்சியில் காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட கழக செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் கலந்து கொண்டு ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அறுசுவை உணவுகளை வழங்கினார்.

பிறகு, மாவட்ட கழக செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் பேசியதாவது:

தமிழ்நாட்டில் அம்மாவினுடைய ஆட்சியை முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் மிகச்சிறப்பாக நடத்தி வருகின்றனர். அனைத்து துறைகளிலும் தமிழகம் சாதனையடைந்து வருகிறது.

திட்டங்கள் உடனுக்குடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி, திருவாரூர் மாவட்டத்தில் விவசாய நண்பனாக வேட்டியை மடித்துக் கொண்டு வயலில் இறங்கி நாற்று நட்டார். மேலும் விவசாயிகளின் குறைகளை அங்கு கேட்டறிந்தார்.

எப்போதுமே விவசாயின் நண்பனாக தமிழக முதல்வர் திகழ்ந்து வருகிறார்.

அம்மாவின் ஆசியால் 24 மணி நேரமும் தமிழக மக்களுக்காக நல்ல பல திட்டங்களை தீட்டி வரும் ஒரே முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமிதான் என்றால் அது மிகையாகாது. மேலும் தமிழ்நாட்டில் பல மாவட்டங்களை பிரித்து புதிய மாவட்டங்களை உருவாக்கி உத்தரவிட்டு வருகிறார். இதனால் மக்களின் பிரச்சனைகள் உடனுக்குடன் தீரும்.

தமிழ்நாடு முழுவதும் ஜெயலலிதாவின் பிறந்தநாளை கொண்டாடி வருகிறோம். ஏழைகளுக்கு அன்னதானங்கள் உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வரும் இந்த ஆட்சியை மக்கள் எப்போதும் விரும்புகின்றனர். மேலும், தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் முத்திரை பதித்து 3 ஆண்டுகள் முடிந்துவிட்டது. 4-ம் ஆண்டில் முதல்வர் எடப்பாடி ஆட்சி சீரிய வியத்தகு சாதனைகளை தமிழக மக்களுக்காக செயல்படுத்தி வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ. மதனந்தபுரம் கே.பழனி, மாவட்ட அண்ணா தி.மு.க. நிர்வாகி அ.ச.மு. சுந்தரராஜன், வாலாஜாபாத் ஒன்றிய கழக செயலாளர் அத்திவாக்கம் செ.ரமேஷ், அண்ணா தி.மு.க. நிர்வாகி எழிச்சூர் இ.வி.ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட மாணவரணி செயலாளர் அய்யப்பன்தாங்கல் ஏ.என்.இ.பூபதி வெகு சிறப்பாக செய்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *