செய்திகள்

திருவள்ளூர் மாவட்டத்தில் 3604 வாக்கு சாவடிகளில் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி

திருவள்ளூர், ஜன. 3–

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 3604 வாக்குசாவடிகளில் நாளை மற்றும் நாளை மறுதினம் வாக்காளா் பட்டியல் திருத்தும் பணி நடைபெறுகிறது.

இது குறித்து மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

திருவள்ளுா் மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்புண்டி, பொன்னோி, திருத்தணி, திருவள்ளுா், புவிருந்தவல்லி, ஆவடி, மதுரவாயல், அம்பத்தூா், மாதவரம், திருவொற்றியுா் ஆகிய பத்து சட்டமன்ற தொகுதிகளிலும் 01.01.2020-ஐ தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு வாக்காளா் பட்டியல்களை சுருக்க முறையில் திருத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு 23.12.2019 அன்று வரைவு வாக்காளா் பட்டியல் வௌியிடப்பட்டது.

அதில் பெயா் விடுபட்டிருந்தாலோ, திருத்தங்கள் ஏதேனும் செய்ய வேண்டியிருந்தாலோ, புதியதாக பெயரை சோ்க்க வேண்டியிருந்தாலோ, நாளை (4–ந் தேதியும்) நாளை மறுநாள் 5–ந் தேதியும், 11 மற்றும் 12–ந் தேதியும் திருவள்ளுா் மாவட்டத்தில் உள்ள 3604 வாக்குச் சாவடிகள் அமைந்துள்ள 1198 பள்ளிகளில் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை பணியில் இருக்கும் வாக்குச் சாவடி நிலை அலுவலா்களிடம் உரிய படிவத்தினை பெற்று பூத்தி செய்து திருத்தம் செய்து கொள்ளலாம்.

மேலும் இது தவிர 22–ந் தேதி வரை அனைத்து வேலை நாட்களிலும் சம்பந்தப்பட்ட வாக்குசாவடி அலுவலா்களிடம் காலை 9.30 மணி முதல் பிற்பகல் 5.00 மணி வரையிலும் மேற்கண்ட படிவங்களை பெற்று பூர்த்தி செய்து திரும்ப அளிக்கலாம். பெறப்படும் அனைத்து படிவங்களும் பாிசீலனை செய்யப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 4.02.2020 அன்று இறுதி வாக்காளா் பட்டியல் வௌியிடப்படு.

இவ்வாறு கலெக்டர் மகேஸ்வாி ரவிக்குமாா் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *