வர்த்தகம்

கூடுதல் நினைவாற்றல், இருட்டில் படம் பிடிக்கும் செல்பி கேமராவுடன் விவோ புதிய செல்போன்; விலை குறைப்பு

சென்னை, மார்ச் 1

விவோ இந்தியா செல்போன் நிறுவனம் கூடுதல் நினைவாற்றல், இருட்டில் பிரகாசமாக செல்பி எடுக்கும் வசதியுடன் கூடிய ‘வி20எஸ்இ’ ரக செல்போனை அதிக நினைவாற்றலான 8ஜிபி ரேம், 128 ஜிபி வசதியுடன் ரூ.1000 குறைவாக ரூ.20 ஆயிரம் சலுகை விலையில் விற்பனை செய்கிறது. இதை அனைத்து செல்போன் ஷோரூமிலும், ஆன்லைன் தளத்திலும் வாங்கலாம்.

இத்துடன் வாடிக்கையாளர்களுக்கு மேலும் பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகிறது.

எச்டிஎப்சி வங்கியின் வழக்கமான கிரெடிட் கார்டு பரிவர்த்தனை மற்றும் கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு தவணை பரிவர்த்தனைக்கு 2 ஆயிரம் ரூபாய் வரை கேஷ் பேக் சலுகை வழங்கப்படுகிறது. பஜாஜ் பைனான்ஸ் மூலம் ஸ்மார்ட்போன் வாங்குபவர்கள் எந்தவித முன்பணமும் கட்டத்தேவையில்லை. மேலும் ஐடிஎப்சி பர்ஸ்ட் பேங்க், எச்டிபி, ஹோம் கிரெடிட், ஐசிஐசிஐ வங்கி, டிவிஎஸ் கிரெடிட் ஆகியவற்றின் மூலம் வாங்குபவர்களுக்கும் முன்பணம் தேவையில்லை. 6 மாதத்திலிருந்து 12 மாதமாக நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் கிடைக்கும்.

இந்த ஸ்மார்ட்போனில் 32எம்பி சூப்பர் நைட் செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இரவு நேரங்களிலும் துல்லியமாக செல்பி எடுக்கலாம். இதில் பொருத்தப்பட்டுள்ள 48எம்பி பின்புற கேமரா சிறந்த தரமான படங்கள் எடுக்க உத்தரவாதம் அளிக்கிறது. இது 3டி டிசைனில் உயர்தர பாலிமரை கொண்டு நேர்த்தியாக கைக்கு அடக்கமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இது 33 வாட்ஸ் பிளாஷ் சார்ஜ் தொழில்நுட்பத்துடன் 4100எம்ஏஎச் திறன் உள்ள பேட்டரியை கொண்டுள்ளது. மூன்று கேமராவுடன் கைரேகை ஸ்கேனரும் இதில் உள்ளது.

‘மேக் இன் இந்தியா’ திட்டத்தில் இந்த ஸ்மார்ட்போன் இந்நிறுவனத்தின் நொய்டா தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *