வாழ்வியல்

ரத்த சோகையை குணப்படுத்தும் வைட்டமின் பி–12

ரத்த சோகையை குணப்படுத்தும் வைட்டமின் பி–12 பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

ரத்த அணுக்கள் நரம்பு மண்டல செயல்பாடு ஆகியவற்றுக்கு சயன கோபாளமின் எனப்படும் வைட்டமின் பி12 அத்தியாவசமானது. இதன் குறைபாட்டால் ரத்த சோகை ஏற்படும்.

அசைவ உணவிலேயே இது அதிகம் கிடைக்கின்றது. வைட்டமின் சி தான் உடலில் அதிகமாக காணப்படும் கொலாஜன் எனப்படும் புரதம் உருவாக காரணம் ஆகின்றது. பல், சருமம், எலும்பு, ரத்த நாளங்கள் ஆரோக்கியமாக இருக்க இந்த வைட்டமின் மிகவும் அவசியமாகின்றது. பழங்கள், காய்கறிகள், கல்லீரல் இவற்றில் அதிகம் கிடைக்கின்றது. ஆய்வுகள் பி வைட்டமின் பிரிவுகள் ஞாபகத்திறனை காப்பதாகக் கூறுகின்றன.

இதே போன்று வைட்டமின் சி, ஈ, பீட்டாகரோட்டின் இவைகளும் மூளை நரம்புகளை காத்து வலிவூட்டுகின்றன. ஆயினும் ஆய்வுகள் கீரை, பருப்பு, ஆரஞ்சு, சோயா இந்த மாதிரி உணவுப் பொருட்களின் மூலம் பெறுவதையே வலியுறுத்துகின்றன.

வைட்டமின் பி பிரிவு குறைபாடுகளை சோர்வு, அதிக படபடப்பு, வெளிர்ந்த சருமம், வறண்ட நாக்கு, ஈறில் இரத்த கசிவு, வயிறு பாதிப்பு, எடை குறைதல் போன்ற அறிகுறிகளின் மூலம் அறிய முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *