செய்திகள்

விஐடி–யில் பி.டெக் பொறியியல் நுழைவுத் தேர்வு விண்ணப்ப படிவம்; தபால் நிலையங்களில் விற்பனை

Spread the love

வேலூர், நவ. 8–

விஐடி பி.டெக் பொறியியல் பட்டப் படிப்புக்கான நுழைவுத் தேர்வு (VITEEE-2020) விண்ணப்ப படிவம் தபால் நிலையங்கள் மூலம் விற்பனை தொடக்கம் வேலூர் தலைமை தபால் நிலையத்தில் வேந்தர் டாக்டர் கோ.விசுவநாதன் தொடங்கி வைத்தார்.

விஐடி பல்கலைக்கழகத்தின் வேலூர், சென்னை, ஆந்திர பிரதேசம் மற்றும் போபால் வளாகங்களில் 2020 ம் ஆண்டிற்க்கான பி.டெக் பொறியியல் பட்ட படிப்பில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு விண்ணப்பங்கள் இன்று முதல் விற்பனை செய்யப்படுகிறது.

வேலூர் தலைமை தபால் நிலையத்தில் விண்ணப்ப படிவம் விற்பனையை இன்று காலை விஐடி வேந்தர் டாக்டர் கோ.விசுவநாதன் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் விஐடி துணைத் தலைவர் சேகர் விசுவநாதன், செயல் இயக்குனர் சந்தியா பெண்ட்ட ரெட்டி, இணை துணை வேந்தர் எஸ். நாராயணன், மாணவர் சேர்க்கை (பி.டெக் ) இயக்குநர் ஜி. கலைச்செல்வன், வேலூர் கோட்ட அஞ்சலகங்களின் கண்காணிப்பாளர் போ.கோமல் குமார், தலைமை அஞ்சல் நிலைய அதிகாரி ஜி.சீனிவாசன், உதவி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் என், ராஜகோபாலன், மக்கள் தொடர்பு அலுவலர் எஸ்.செல்வகுமார் மற்றும் டி.சிவலிங்கம் ஆகியோர் பங்கேற்றனர்.

விஐடி பல்கலைக்கழகத்தின் வேலூர் வளாகத்தில் பி.டெக் சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேசன், பயோ டெக்னாலஜி, பயோ இன்பர்மேடிக்ஸ், கெமிக்கல் இன்ஜினியரிங், இன்பர்மேஷன் டெக்னாலஜி, சிஎஸ்இ- கம்ப்யூடர் சயின்ஸ் இன்ஜினியரிங் (சிஎஸ்இ), எலக்ட்ரானிக்ஸ் கம்யுனிகேசன் வித் பயோ மெடிக்கல் இன்ஜினியரிங், சிஎஸ்இ- ஸ்பெஷலையிடு இன் இன்பர்மேடிக்ஸ், மெக்கானிக்கல் ஸ்பெஷலயிடு இன் ஆட்டோ மோடிவ் இன்ஜினியரிங், புரடக்சன் அண்டு இன்டஸ்ட்ரியல் இன்ஜினியரிங், கம்ப்யூடர் சயின்ஸ் இன்ஜினியரிங் (சிஎஸ்இ) வித் ஸ்பெஷல் இன் ஐஒடி அண்டு சென்சார் உள்ளிட்ட 18 பொறியியல் பாட பிரிவுகளில் சேர நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது.

விஐடி சென்னை வளாகத்தில் பி.டெக் சிவில், மெக்கானிக்கல், சிஎஸ்இ கம்ப்யூட்டர் சயின்ஸ், எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யுனிகேசன், எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்ப்யூட்டர் இன்ஜினியரிங், ஃபேஷன் டெக்னாலஜி போன்ற பொறியியல் பாட பிரிவுகளுக்கும், விஐடி அமராவதி வளாகத்தில் பி.டெக் சிஎஸ்இ- கம்யூட்டர் சயின்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேசன், மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ் வித் நெட்வொர்கிங் அண்டு செக்யூரிட்டி, கம்ப்யூட்டர் சயின்ஸ் வித் ஸ்பெஷல் இன் டேட்டா அனலடிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேசன் வித் எம்பாடட் சிஸ்டம்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேசன் வித் விஎல்எஸ்ஐ, சிஎஸ்இ வித் ஆர்டிபிசியல் இன்டலிஜென்ஸ் போன்ற பொறியியல் பாட பிரிவுகளுக்கும்.

விஐடி போபால் வளாகத்தில் பி.டெக் பயோ இன்ஜினியரிங், சிஎஸ்இ- கம்ப்யூட்டர் சயின்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யுனிகேசன், மெக்கானிக்கல், கம்யூட்டர் சயின்ஸ் வித் கேமிங் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட் இன்ஜினியரிங், ஸ்பெஷலயிடு இன் டிஜிட்டல் போரென்சிக்ஸ் மற்றும் சைபர் செக்யூரிட்டி, ஏரோ ஸ்பேஸ், சிஎஸ்இ ஏஐ அண்டு மெஷின் லேர்னிங் போன்ற பொறியியல் பாட பிரிவுகளில் சேர நுழைவுத் தேர்வு (VITEEE-2020) நடத்தப்பட உள்ளது.

அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் 13–ந் தேதி முதல் 19–ந் தேதி வரை ஆன் லைன் முறையில் நாட்டில் உள்ள 124 முக்கிய நகரங்களிலும் துபாய், குவைத், மஸ்கட் மற்றும் கத்தார் உள்ளிட்ட வெளிநாடுகளிலும் அமைக்கப்பட்டுள்ள 175 மையங்களில் இந்த நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது.

நுழைவுத் தேர்வு விண்ணப்ப படிவங்கள் இன்று முதல் வேலூர் உட்பட நாட்டில் உள்ள 22 முக்கிய நகரங்களில் உள்ள தலைமை தபால் நிலையங்கள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. விண்ணப்ப கட்டணம் ரூ.1250/- செலுத்தியும் , விஐடி (Vellore Institute of Technology) என்ற பெயரில் ரூ.1250/-க்கு வங்கி வரைவு காசோலை செலுத்தியும் நேரில் பெற்றுக் கொள்ளலாம். ஆன் லைன் மூலம் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.vit.ac,.in என்ற இணையதளத்தின் மூலம் ரூ.1150/-செலுத்தியும் விண்ணப்பிக்கலாம்.இந்த நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் 29 ந் தேதி கடைசி நாளாகும். மேலும் இது சம்மந்தமாக விவரங்கள் அறிய www.vit.ac.in என்ற இணையதளத்தை அறியலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *