செய்திகள்

விசாலினி சுந்தரத்தின் நாட்டியம்: வியப்பிலாழ்த்திய வர்ணம்…!

Spread the love

சென்னை, ஜன. 3

அனுஷம் ஆர்ட்ஸ் அகாடமி சார்பில் விசாலினி சுந்தரத்தின் (ரம்யா ஹரிஷங்கரின் சிஷ்யை) நாட்டிய நிகழ்ச்சி ஆர்.ஆர். சபா கலையரங்கில் நடந்தது.

கலிபோர்னியா பல்கலைக்கழகத்திலிருந்து வர்த்தக நிர்வாகம் – மேலாண்மைப் பட்டம் பெற்றவர். அனுஷம் ஆர்ட்ஸ் அகாடமியில் ஆசிரியை. இவர் சிறந்த பாடகி. நட்டுவாங்கத்திலும் திறமைசாலி. டிசம்பர் மாதம் பிறந்தார். இசை – கலைவிழா நேரத்தில் ஒவ்வொரு ஆண்டும் சென்னைக்கு விஜம் செய்து, பல்வேறு சபாக்கள் ஆதரவில் நாட்டிய நிகழ்ச்சிகளை நடத்தி வருபவர்.

ஸ்வராஞ்சலியில் நிகழ்ச்சியைத் துவக்கினார். சகியே இந்த வேளையில்… தஞ்சை நால்வரின் வர்ணம். அடுத்து சிக்கலன்னே… பாடல், பதம். தொடர்ந்து நீ மாட்டலே… ஜாவளி. முடிவில் லால்குடி ஜி. ஜெயராமனின் தில்லானாவோடு நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.

பழுத்த அனுபவம், விசாலினியின் நாட்டியத்தில் மிளிர்ந்தது. சகியே இந்த வேளையில், வர்ணத்தில் அவரது பாவங்கள்… ஒவ்வொரு அசைவையும் அணுஅணுவாக ரசிக்க வைத்தது. வியப்பிலாழ்த்தியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *