செய்திகள்

விழுப்புரம் கலெக்டர் அண்ணாதுரை தலைமையில் தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் ஆலோசனைக் கூட்டம்

விழுப்புரம், மார்ச் 1–

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சட்டமன்ற தேர்தல் – 2021 நன்னடத்தை விதிமுறைகள் குறித்து தேர்தல் பறக்கும்படை அலுவலர்களுக்கான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரை தலைமையில் நடைபெற்றது.

இந்த ஆலோசனைக்கூட்டத்தில் கலெக்டர் அண்ணாதுரை பேசியதாவது:

2021- சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்திரவின்படி விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து நடத்தை விதிமுறைகளை கண்காணிப்பதற்காக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டமன்ற தொகுதிகளிலும் ஒரு தொகுதிக்கு 3 குழுக்கள் வீதம் மொத்தம் 21 பறக்கும் படை குழுக்களும், ஒரு தொகுதிக்கு 1 குழு வீதம் 7 நிலையான கண்காணிப்பு குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ள அனைத்து அரசு அலுவலர்களும், காவல் துறையை சார்ந்தவர்களும் கண்காணிப்பு குழுக்களை சார்ந்தவர்களும் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை பின்பற்றி நடுநிலையுடன் விழிப்புடன் பணியாற்றிட வேண்டும், விதிமுறைகளை மீறுபவர்கள் மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த ஆலோசனைக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) மோகன், ஊரகவளர்ச்சித்துறை செயற்பொறியாளர் ராஜா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *