செய்திகள்

9 மாதங்களில் முதன்முறையாக மிகக் குறைவான தொற்று பாதிப்பு

டெல்லி, பிப். 2–

இந்தியாவில் கடந்த 9 மாதங்களில் முதன் முறையாக ஒருநாள் தொற்று பாதிப்பும் பலி எண்ணிக்கையும் மிக மிக குறைவான அளவாக பதிவாகி உள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் வேகம் படிப்படியாக குறைந்து வருகிறது. தற்போது புதிய தொற்று பாதிப்பு 8 ஆயிரம் என்ற அளவில் உள்ளது. அதேசமயம், நாடு முழுவதும் குணமடைவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கையும் 1.54 லட்சத்தை தாண்டியுள்ளது.

இந்நிலையில், இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:–.

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 8,635 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,07,66,245 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 94 பேர் பலியான நிலையில், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,54,486 ஆக உயர்ந்துள்ளது.

1,63,353 பேருக்கு சிகிச்சை

இந்தியாவில் தொற்றில் இருந்து ஒரே நாளில் 13,423 பேர் குணமடைந்துள்ள நிலையில் இதுவரை மீண்டவர்களின் எண்ணிக்கை 1,04,48,406 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,63,353 பேருக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

குணமடைந்தோர் விகிதம் 97.05% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.43% ஆக குறைந்துள்ளது. சிகிச்சை பெறுவோர் விகிதம் 1.52% ஆக குறைந்துள்ளது. இந்தியாவில் ஒரே நாளில் 6,59,422 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை 19,77,52,057 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

ஜனவரி 16 ந்தேதி தொடங்கி நாடு முழுக்க இதுவரை 39,50,156 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *