செய்திகள்

வேல்ஸ் வேந்தர் திருமண வெள்ளி விழா: அமைச்சர்கள், கட்சி தலைவர்கள் நேரில் வாழ்த்து

Spread the love

வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் ஐசரி கே.கணேஷ், இணை வேந்தர் டாக்டர் ஆர்த்தி கணேஷ் ஆகியோரின் திருமண வெள்ளி விழா திருவான்மியூர் ராமச்சந்திரா கன்வென்ஷன் ஹாலில் வெகு சிறப்பாக நடந்தது.

இவ்விழாவில் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, பி. தங்கமணி, கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.வீரமணி, எம்.சி.சம்பத், டாக்டர் விஜயபாஸ்கர், கடம்பூர்ராஜு, ம.பா.பாண்டியராஜன், மக்கள் நீதி மய்யத் தலைவர் டாக்டர் கமலஹாசன், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் டாக்டர் ஜெயவர்த்தனன், புதுவை முன்னாள் முதலமைச்சர் ரங்கசாமி, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத்தலைவர் கிருஷ்ணசாமி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன், பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் இல.கேணேசன், மத்திய முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன், தேசியச் செயலாளர் எச்.ராஜா, முன்னாள் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, சைதை துரைசாமி உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் பெருமளவில் வருகை தந்து வாழ்த்தினர்

எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத்தின் வேந்தர் டாக்டர் ஏ.சி.சண்முகம், ஆர்.எம்.கே. பொறியியல் கல்லூரியின் தலைவர் முனிரத்தினம், துணைவேந்தர் பேராசிரியர் திருவாசகம், இசைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் பிரமிளா குருமூர்த்தி

சரத்குமார்–ராதிகா சரத்குமார், பாக்யராஜ் – பூர்ணிமா பாக்யராஜ், குஷ்பு – சுந்தர்.சி, சிவக்குமார், ஒய்.ஜி.மகேந்திரன், எஸ்.வி.சேகர், செந்தில், டி.ராஜேந்தர், பாண்டியராஜன், பொன்வன்னன், விக்ரம் பிரபு, நிழல்கள் ரவி, ஜீவா, நடிகை மீனா, இயக்குநர்கள் கவுதம் வாசுதேவ மேனன், ஏ.எல்.விஜய் உள்ளிட்ட திரைவுலகப் பிரமுகர்களும்,

சென்னைப் பெருநகர கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், நீதிபதி எஸ்.ஜெகதீசன், தகவல் அறியும் உரிமை ஆணையர் பிரதாப்குமார், தொழில் அதிபர் நல்லி குப்புசாமி செட்டியார் ஆகியோர் நேரில் வந்து வேந்தர் ஐசரி கே. கணேஷ்–ஆர்த்தி கணேஷுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *