செய்திகள் வாழ்வியல்

வேலூர் வன்னிவேடு அகஸ்தீஸ்வரர் கோவில்

Spread the love

அருள்மிகு அகஸ்தீஸ்வரர் கோவில், வன்னிவேடு, வேலூர் மாவட்டம்.

இந்த திருக்கோவில் வேலூரிலிருந்து 36 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள வன்னிமேடு என்ற சிறிய கிராமத்தில் உள்ளது. இங்கு ஒரு வன்னி மரத்தின் கீழ் விநாயகபெருமான் மற்றும் சனீஸ்வரர் அடுத்த அடுத்த சன்னதிகளில் அருள்பாலிக்கின்றனர். இங்கு வீடு மற்றும் கட்டிடம் கட்ட ஆரம்பிப்பவர்கள் தங்கள் பணியை செம்மையாக முடித்து இங்கு வந்து இந்த சனீஸ்வர பகவானுக்கு 17 பாகற்காய்களை மாலையாக கோர்த்து அணிவித்து எள் விளக்கு ஏற்றி தங்களது காரியம் தடைகளின்றி நடைபெறவேண்டும் என்று வணங்கி வழிபட்டு வருகின்றனர். பாகற்காய் கசப்பான ருசி கொண்டது. தங்களது வாழ்க்கையில் இந்த ருசி போன்ற கசப்பான அனுபவங்களை இந்த சனீஸ்வர பகவான் இடமே விட்டு விடுவதாகவும் தங்களுக்கு இனி வாழ்க்கையில் நல்ல ருசியான சம்பவங்கள் நடைபெற வேண்டுமென்று கேட்டுக் கொள்கின்றனர். அதனுடைய தாத்பரியமே பாகற்காய் மாலை அணிவித்தல் என்று கூறுகின்றனர்.

ஒருசமயம் வன்னி மரங்கள் நிறைந்திருந்த இந்த வனத்தில் அகத்திய முனிவர் மணலில் லிங்கம் அமைத்து சிவபூஜை செய்ததாகவும் அதன் காரணமாகவே இங்குள்ள சிவபெருமானுக்கு அகஸ்தீஸ்வரர் என்ற பெயர் உண்டாயிற்று என்றும் பின்னர் இந்த தலத்தில் இந்தக் கோவில் அமைக்கப்பட்டது என்கின்றர்.அகஸ்தீஸ்வரர் மிகவும் குள்ளமானவர் என்பது தெரிந்ததே.

எனவே அவர் மிக சிறிய அளவிலே இந்த சிவலிங்கத்தை அமைத்து உள்ளார் என்றும் லிங்கத்தின் மீது அவரது கைரேகைகள் உள்ளது. இப்போதும் தெரிகிறது. இந்த சிவலிங்கத்தின் அருகில் ஒரு சிறிய பீடத்தின் மீது அம்பாள் புவனேஸ்வரி தவக்கோலத்தில் காட்சி தருகிறார். இதற்கு முன்பு அகஸ்தீஸ்வரர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. திங்கள் கிழமைகளில் சிவபெருமானுக்கு பச்சைக் கற்பூரம் அபிஷேகம் செய்கின்றனர். குறிப்பாக சதய நட்சத்திரம், வளர்பிறை, பஞ்சமி அன்று அகஸ்தியர் சிலைக்கு ரிஷி பூஜை செய்யப்படுகிறது.

இங்குள்ள அன்னை புவனேஸ்வரியை பவுர்ணமி அன்று சப்தரிஷிகளும் வந்து வழிபடுவதாக தீகம். எனவே ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் இரவில் அம்பாள் சன்னதி முன்பு ‘லகு சண்டி ஹோமம்’ நடத்துகின்றனர்.

மேலும் இங்கு பிரகாரத்தில் அஷ்டதிக்கு பாலகர்கள் எட்டுதிசையிலும் தனித்தனி சன்னதிகளில் காட்சி தருகின்றனர். ஒவ்வொரு அஷ்டதிக்கு அதிபர்களுக்கும் வெள்ளிக்கிழமை அன்று விளக்கு ஏற்றி அபிஷேகம் செய்து நைவேத்தியம் படைத்து வேண்டிக்கொள்கின்றனர்.

குறிப்பாக இந்த திருக்கோவிலுக்கு வருபவர்கள் தங்களுடைய வாழ்க்கை வளம் பெற வேண்டும். தங்களுக்கு ஏற்பட்ட கஷ்டங்கள் எல்லாம் கசப்பான அனுபவங்கள் ஆக இருந்தாலும் இனிவரும் காலங்கள் தாங்கள் நினைத்தது போலவே சுபிட்சமாக இருக்கவேண்டும் என்பதற்காக இங்கு வந்து இந்த சனீஸ்வர பகவானையும் அன்னை புவனேஸ்வரியையும் அஷ்ட திக்கு பாலகர்களையும் வணங்கி செல்கின்றனர்.

இங்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்றும் பிரதோஷ தினத்தன்றும் கந்த சஷ்டி, மற்ற பண்டிகை தினத்தன்றும் தமிழ், ஆங்கில வருடப்பிறப்பு தினங்களிலும் சிவராத்திரியன்றும் விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன. தினமும் காலை 6 மணி முதல் பகல் 11 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் இந்த திருக்கோவில் பக்தர்களுக்காக திறந்து உள்ளது.

அருள்மிகு அகஸ்தீஸ்வரர் திருக்கோவில், வன்னிவேடு, வேலூர் மாவட்டம். பின் கோடு எண்:– 632 513 போன்:– 04172 – 270 595 .

போதோ விசும்போ புனலோ பணிகள் அதிபதியோ

யாதோ வறிகுவ தேது மரிதி யமன் விடுத்த

தூதோ வனங்கன்றுணையோ வினையிலி தொல்லைத் தில்லை

மாதோ மட மயிலோவென நின்றவர் வாழ்பதியோ !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *