செய்திகள்

4 ஆண்டுகளில் எண்ணற்ற வெற்றி திட்டங்கள்: எடப்பாடிக்கு பாராட்டு

* நிர்வாக வசதிக்காக 6 புது மாவட்டம்

* கொரோனா தடுப்பு சிறந்த பணிகள்

* 26 லட்சம் மகளிருக்கு ரூ.80 ஆயிரம் கோடி கடனுதவி

4 ஆண்டுகளில் எண்ணற்ற வெற்றி திட்டங்கள்: எடப்பாடிக்கு பாராட்டு

சென்னை, ஜன.9–

நிர்வாக வசதிக்காக 6 புது மாவட்டங்கள் உருவாக்கப்பட்டது உள்பட கடந்த 4 ஆண்டுகளில் பல்வேறு வெற்றி

திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்றியமைக்கு அம்மாவின் அரசுக்கு இப்பொதுக்குழு பாராட்டு தெரிவித்துக்கொள்கிறது.

புரட்சித்தலைவி அம்மாவின் மறைவுக்கு பிறகு, தமிழ்நாட்டின் எதிர்காலம் என்னவாகுமோ என்று கலங்கி இருந்த மக்களுக்கு, உறுதியான தலைமையையும், திறமையான நிர்வாகத்தையும், எளிமையான அணுகுமுறையையும் தந்து, தமிழ்நாடு செழிக்க வகை செய்திருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் முயற்சிகளை இப்பொதுக்குழு பெரிதும் பாராட்டுகிறது.

காவிரி நதிநீர் பங்கீட்டில் இருந்த இடர்ப்பாடுகளை நீக்கி நிரந்தரத் தீர்வு, காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக்கிய சட்டம், அத்திக்கடவு – அவினாசி திட்டம் செயலாக்கம், குடிமராமத்துத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதன் மூலம் 30 ஆண்டுகளில் இல்லாத மகசூல், காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டம், மின்மிகை மாநிலம் மற்றும் நீர் மிகை மாநிலம் என்னும் சிறப்பு;

நிர்வாக வசதிக்காக 6 புதிய மாவட்டங்கள், மிகச்சிறந்த கொரோனா தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகள், 2 ஆயிரம் முதலமைச்சர் அம்மா மினி கிளினிக்குகள், சுயஉதவிக்குழுக்களைச் சேர்ந்த 26 லட்சம் மகளிருக்கு 80 ஆயிரம் கோடி ரூபாய் கடனுதவி, புதிதாக 17 அரசு மருத்துவக் கல்லூரிகள், 7 சட்டக் கல்லூரிகள், 40 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 249 தொடக்கப்பள்ளிகள் மற்றும் எண்ணற்ற வளர்ச்சித் திட்டங்கள் வழியாக தமிழகத்தை வெற்றி நடைபோடும் மாநிலமாக அம்மாவின் அரசு உயர்த்தி இருக்கிறது.

வளர்ந்து வரும் சென்னை பெருநகரத்தின் தண்ணீர் தேவைகளை நிறைவு செய்ய, அண்ணா தி.மு.க. ஆட்சிக் காலங்களில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் புதிய திட்டங்கள், கழகத்தின் தொலைநோக்கு சிந்தனைகளின் வெளிப்பாடாக அமைகின்றன.

* புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். கிருஷ்ணா நதிநீர் திட்டத்தை தனது அருமுயற்சியால் செயல்படுத்தினார். புரட்சித்தலைவி அம்மாவின் சிந்தனையில் உதித்த, கண்ணன்கோட்டை – தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்க திட்டத்தை, அம்மாவின் அரசு 380 கோடி ரூபாய் செலவில் நிறைவேற்றி, 21.11.2020 அன்று மக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்துள்ளது. இத்திட்டத்தின் மூலம், ஆந்திர மாநிலத்தில் இருந்து பெறப்படும் கிருஷ்ணா நிதி நீரையும், பருவமழைக் காலங்களில் கிடைக்கப் பெறும் மழை நீரையும் தேக்க, வழிவகை செய்துள்ள அம்மாவின் அரசுக்கு இப்பொதுக்குழு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

உலக வரைபடத்தின் சிறப்பு நகரம்

* உலக வரைபடத்தின் சிறப்புமிக்க பெருநகரமாக மாறி இருக்கும் சென்னை மாநகரத்து போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தும் வண்ணம் 61,843 கோடி ரூபாய் மதிப்பிலான சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் இரண்டாம் கட்டம், கோவை – அவினாசி சாலையில் ரூ.1620 கோாடியில் உயர்மட்ட சாலைத்திட்டம், கரூர் மாவட்டம், நஞ்சை புகளூரில் ரூ.406 கோடியில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணைத் திட்டம், ரூ.309 கோடியில் சென்னை வர்த்தக மையம் விரிவாக்கத் திட்டம் போன்ற எண்ணற்ற வளர்ச்சிப் பணிகளுக்கு, மத்திய உள்துறை அமைச்சரை அடிக்கல் நாட்ட அழைத்து, தமிழகத்தை உள்கட்டமைப்பு வசதிகளில் முதலிடம் பெறச் செய்திருக்கும், அம்மாவின் அரசுக்கு இப்பொதுக்குழு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

* கரூர் மாவட்டத்திலுள்ள கட்டளை முதல் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள குண்டாறு வரை, காவிரி ஆற்றில் கிடைக்கும் வெள்ள நீரை திருப்பி கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களின் குடிநீர் மற்றும் பாசனத் தேவைகளை நிறைவு செய்யும் மகத்தான பணியை மேற்கொண்டிருக்கும் அம்மாவின் அரசுக்கு இப்பொதுக்குழு பாராட்டும், நன்றியும் கூறி மகிழ்கிறது.

மக்களின் தேவை அறிந்தும், எதிர்கால சந்ததியினரின் தேவைகளுக்காகவும் புதுப்புதுத் திட்டங்களை திறம்பட நிறைவேற்றி, கழகத்தை பெருமை கொள்ளச் செய்யும் வகையில் பணியாற்றி வரும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு இப்பொதுக்குழு தனது நெஞ்சார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *