வாழ்வியல்

சுற்றுச்சூழல் மாசு அடைவதால் நீர்வளம் குறைந்து மக்களுக்கு ஏற்படும் பல்வேறு ஆபத்துக்கள்

சுற்றுச்சூழல் மாசு அடைவதால் மக்களுக்கு பல்வேறு ஆபத்துக்கள் வர இருக்கின்றன.

தொழிற்சாலைகள், வேளாண் நிலங்கள், வேளாண் பண்ணைகள், நகர்ப்புறக் கழிவுகள் முதலியவற்றிலிருந்து வெளியேறும் கழிவுப் பொருட்கள் ஆறுகளிலும் வடிகால்களிலும் வேறு நீர்நிலைகளிலும் கலந்துவிடுவதால் நீரின் தரமும் நீர்வாழ் உயிரினங்களும் பாதிக்கப்படுகின்றன. இதனால் புவியின் நீர்வளங்கள் பாதிக்கப்படுகின்றன.

மேலும் வளிமண்டலத்தில் கலக்கும் மாசுகள் மழைநீருடன் கலந்து நிலத்தை அடைகின்றன. இவை நீருடன் நிலத்துக்கு அடியில் சென்று நிலத்தடி நீரையும் ஆறுகள், குளங்கள் முதலியவற்றையும் மாசுபடுத்துகின்றன.

எனினும் இவை முன் குறிப்பிட்டவற்றை விட குறைந்தளவிலேயே பாதிப்பைத் தருகின்றன. மண் மாசடைதல்

இதற்கும்gமுக்கிய காரணிகளாக இருப்பினும் தற்கால வேளாண்மை முறைகளும் மண்மாசடைதலுக்குப் பெருமளவு பங்களிப்புச் செய்கின்றன எனலாம். வேதியியல் உரங்கள், பூச்சிக்கொல்லிகள், களைக்கொல்லிகள் முதலியவற்றின் அதிகளவிலான பயன்பாட்டினால் மண் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கதிரியக்கப் பாதிப்பு

அணு மின்சார உற்பத்தி, அணு ஆயுத ஆராய்ச்சிகள், அணு ஆயுத உற்பத்தி போன்ற இருபதாம் நூற்றாண்டு நிகழ்வுகளால் கதிரியக்கக் கழிவுகள் உருவாகி சுற்றுச் சூழல் மாசடைகிறது. ஒலி மாசடைதல்

ஒலிசார் மாசடைதல் என்பது சாலைகளில் ஏற்படும் வண்டி ஒலி, வண்டி ஒலிப்பான்களால் ஏற்படும் மிகுதியான ஒலி, வானூர்தியின் ஓசை முதலியவற்றால் ஏற்படுகிறது. ஒளிசார் மாசடைதல்

ஒளி அத்து மீறுகை, அதிகப்படியான ஒளியூட்டம், வானியல்சார் குறுக்கீட்டு விளைவு போன்றவை இவ்வகை மாசில் அடங்கும். காட்சி மாசடைதல்

இவ்வகை மாசுக்கு, தலைக்கு மேலாகச் செல்லும் மின்கம்பிகள், சாலை ஓரங்களில் வைக்கப்படும் பெரிய விளம்பரப் பலகைகள், பாதிக்கப்பட்ட நிலவடிவங்கள், திறந்த வெளிக் குப்பைக் கிடங்குகள், திடக் கழிவுகள், விண்வெளி சிதைவுக் கூளங்கள் போன்றவை எடுத்துக்காட்டுகளாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *