வர்த்தகம்

நவீன வசதிகளுடன் டொயோடா அர்பன் சொகுசு கார் அறிமுகம்: விலை ரூ.8.5 லட்சம்

சென்னை, செப். 25–

டொயோடா கிர்லோஸ்கர் நிறுவனம் புதிய அர்பன் குருசியர் என்னும் அனைத்து நவீன வசதிகள் கொண்ட சொகுசு காரை ரூ.8.5 லட்சம் முதல் ரூ.9.80 லட்சம் வரை விலையில் விற்பனை செய்கிறது. இதில் சிறப்பு ரகமாக ஆட்டோமேடிக் கியர் வசதி கொண்ட கார்கள் ரூ.9.80 லட்சம் விலை முதல் ரூ.11.30 லட்சம் விலையில் கிடைக்கும் என்று இதை அறிமுகம் செய்த இதன் நிர்வாக இயக்குனர் மசகாசு யோசிமூரா தெரிவித்தார்.

இந்த நிறுவன விற்பனை பிரிவு சீனியர் துணைத் தலைவர் நவீன் சோனி, துணைத் தலைவர் தடசி அசசுமா உடன் இருந்தார்.

இந்த சொகுசு காரில் கே–ரக பெட்ரோல் என்ஜின் உள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 18.76 கி.மீட்டர் தூரம் போகும். சிறந்த எரிபொருள் சிக்கன காராக இது கிடைக்கிறது. இதற்கு 3 ஆண்டு கியாரண்டி உண்டு. எல்.இ.டி. விளக்குகள், பாதுகாப்பு ஏர்–பேக், எலக்ட்ரானிக் பிரேக் மற்றும் ஏபிஎஸ் என்னும் வழுக்கி செல்லாத பிரேக் வசதி உள்ளது.

மழை பெய்யத் துவங்கினால் தானாக வைப்பர் ஓடத் துவங்கும் வசதி இதில் உள்ளது. டிஜிட்டல் ஆடியோ வீடியோ வசதி இதில் உள்ளது. இந்த டொயோடா அர்பன் குருசியன் சொகுசு கார் அனைவரையும் கவரும் என்றார். இது பற்றி அறிய www.toyotabharat.com வலைதளம் பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *