செய்திகள்

பிரின்ஸ் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பத்மாவதி பொறியியல் கல்லூரிக்கு சிறந்த நாட்டுநலப்பணி திட்டத்திற்கான விருது

Spread the love

சென்னை, அக்.16-

பிரின்ஸ் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பத்மாவதி பொறியியல் கல்லூரிக்கு சிறந்த நாட்டுநலப்பணி திட்டத்திற்கான விருதை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா வழங்கினார்.

சென்னையில் அண்ணா பல்கலைக்கழக விவேகானந்தர் அரங்கில் சிறந்த நாட்டுநலப்பணி திட்டத்திற்கான விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா பங்கேற்று சிறந்த நாட்டு நலப்பணித் திட்டத்தின் அமைப்பிற்கான விருதை சென்னை மேடவாக்கத்தில் அமைந்துள்ள பொன்மாரில் உள்ள பிரின்ஸ் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பத்மாவதி பொறியியல் கல்லூரிக்கு வழங்கினார். இவ்விருதை பிரின்ஸ் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டத்தின் நிகழ்ச்சி அலுவலர்கள் ரஜினி மற்றும் சக்தி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் நாட்டு நலப்பணி திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் ஆர்.ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *