செய்திகள்

ஈரான் ராணுவ தளங்கள் மீது அமெரிக்கா வான்வழி தாக்குதல்

வாஷிங்டன், பிப். 26–

சிரியாவில் உள்ள ஈரான் ராணுவ தளங்கள் மீது அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.

ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே தாக்குதல் சம்பவங்கள் சில ஆண்டுகளாகவே தொடர்ந்து வரும் நிலையில், கடந்த 15ம் தேதி ஈரான் விமானங்கள், அமெரிக்க படைதளங்கள் மீது தாக்குதல் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் அமெரிக்க வீரர்கள் பலர் காயமடைந்தனர்.

இதனைத்தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் உத்தரவின்படி, கிழக்கு சிரியாவில் உள்ள ஈரான் ராணுவ தளங்கள் மீது அமெரிக்க ராணுவம் நேற்று வான் வழி தாக்குதல் நடத்தியதாகவும் இதனால் ஈரான் விமான தளங்கள் சேதமடைந்துள்ளன என்றும் அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனின் செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவித்துள்ளார்.

கடந்த 15 ஆம் தேதி அமெரிக்க படைத்தளங்கள் மீது ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் விதமாகவே இந்த வான் தாக்குதலை அமெரிக்கா நடத்தியிருப்பதாகவும் கூறப்படுகிறது. அமெரிக்கா தனது கூட்டணிகளை பாதுகாப்பதில், ஜோ பிடன் அரசு உறுதியாக இருப்பதாகவும் ஜான் கிர்பி கூறி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *