செய்திகள்

காயத்துடன் வெளியேறினார் உமேஷ் யாதவ்

மெல்போர்ன், டிச. 28–

மெல்போர்னில் நடந்துவரும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் தனது 4வது ஓவரை வீசத் தொடங்கிய இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதனால் அவருக்கு காலி காயம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து 3 பந்துகள் மட்டுமே வீசிய நிலையில் அவர் மைதானத்திலிருந்து வெளியேறினார். அவர் மீண்டும் விளையாட வருவாரா? என்ற சந்தேகம் நிலவி வருகிறது. மீதமுள்ள 3 பந்துகளை சிராஜ் வீசினார்.

ஏற்கெனவே இந்திய அணியின் பந்து வீச்சார் இசாந்த் சர்மா பங்கேற்க முடியாத நிலையில் முதல் டெஸ்ட் போட்டியில் ஏற்பட்ட காயத்தால் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி டெஸ்ட் தொடரிலிருந்து வெளியேறி உள்ளார். உமேஷ் யாதவுக்கு ஏற்பட்ட காயம் இந்திய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. தற்போது இந்திய அணியில் வேகப்பந்துவீச்சில் பும்ரா, சிராஜ் மட்டுமே பந்துவீசி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *